கடலூர் மாவட்டத்தைச் திட்டக்குடி அருகேயுள்ள அரங்கூரைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர் என்பதால் அவருக்கு தோனி மீதான தனது நம்பிக்கை, அன்பு மற்றும் , சிஎஸ்கே அணியின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தனது வீட்டை முழுமையாக மஞ்சள் வண்ணத்தில் மாற்றியதுடன் மேலும், வீட்டின் முகப்பில் தோனியின் உருவப் படங்களை வரைந்து அந்த வீட்டிற்கு #Home of Dhoni fan பெயரிட்டு இருந்தார். இந்த வீடு குறித்து தோனி ஒரு நேர்காணலில் இது போன்ற நிகழ்வுகள் மக்கள் என் மீதும் சிஎஸ்கே மீதும் மக்கள் எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்துள்ளார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

 



 

இந்த நிலையில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி கொரோனவிர்க்கு முன் நடந்த முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போனாலும், தற்பொழுது நடந்த இரண்டாம் பாதியில் சிறப்பான ஆடத்தினை வெளிப்படுத்தி இன்று நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது அதனால் கோபிகிருஷ்ணன் சிஎஸ்கே அணி இன்று நடக்கும் இறுதி போட்டியில் கேகேஆர் அணியினை வீழ்த்தி வெற்றி பெறும் என அனைவருக்கும் நம்பிக்கை கூறும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில்,

 

கடந்த 2017ஆம் ஆண்டு வரையில் தடை செய்யப்பட்டிருந்த பின் சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை என சிஎஸ்கே அணியையும் தோனி அவர்களையும் அனைவரும் கேலியாக பேசி வந்தனர் அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக நான் எனது #Home of Dhoni fan என்ற இல்லத்தினை கட்ட வேண்டும் என எண்ணி சென்ற வருடம் கட்டி முடித்து தோனி சாரின் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்ட முயற்சி செய்தேன், இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டம் நெருப்பு ஆட்டமாக இருக்கும், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி இறுதி போட்டிக்கு முன்னேறி வெற்றி பெற முடியவில்லை என்றாலும் இந்த முறை நிச்சியமாக வெற்றி பெறும் தோனியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருங்கள், சி.எஸ்.கேக்கு விசில் போடு என வீடியோவில் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.