ஐ.பி.எல். போட்டியில் நேற்று குஜராத் அணிக்கும்,ஹைதராபாத் அணிக்கும் நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய சஷாங்சிங் அனுபவ பந்துவீச்சாளரான பெர்குசனின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை அடுத்தடுத்து அசத்தினார். ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த சஷாங்சிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.














இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பெர்குசன் வீசிய கடைசி ஓவரில் 4 பவர்புல் சிக்ஸர்களை சஷாங்சிங் மற்றும் மார்கோ ஜென்சன் விளாசினார் என்று பதிவிட்டு கைதட்டும் எமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும், ஐ.பி.எல். போட்டிகளில் அழகே இளம் வீரர்களின் திறமையை அறிந்து கொள்வதே ஆகும். பெர்குசனின் கடைசி ஓவரில் சஷாங்சிங் மார்கோ ஜென்சனுடன் இணைந்து விளாசினார் என்று பதிவிட்டுள்ளார். சஷாங்சிங் 31 வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இதுவரை இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சஷாங்சிங் இந்த போட்டியில் 6 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 25 ரன்களை விளாசினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண