ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். அபிஷேக் சர்மா(65) மற்றும் மார்க்கரம்(56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓஅர்களின் முடிவில் 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் 5 விக்கெட்டையும் வீழ்த்தி சன்ரைசர்ஸ் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அசத்தியிருந்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அவர் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேலும் அவர் ஒரு சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
அதாவது ஐபிஎல் தொடரில் இந்தியாவிற்கு விளையாடாமல் ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் உம்ரான் மாலிக் இணைந்தார்.
இந்தியாவிற்கு விளையாடாமால் ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட் எடுத்த வீரர்கள்:
5/14 அன்கித் ராஜ்பூட் v சன்ரைசர்ஸ் 2018
5/20 வருண் சக்ரவர்த்தி v டெல்லி 2020
5/25 உம்ரான் மாலிக் v குஜராத் 2022
5/27 ஹர்ஷல் பட்டேல் v மும்பை 2021
5/32 அர்ஷ்தீப் சிங் v ராஜஸ்தான் 2021
இவ்வாறு இந்தச் சாதனைப் பட்டியலில் உம்ரான் மாலிக் இணைந்து அசத்தியுள்ளார். மேலும் இன்றைய போட்டியில் வேகமாக பந்துவீசி அவர் குஜராத் அணியின் வீரர்களை திணறடித்தார். அத்துடன் நடப்புத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 15 விக்கெட் உடன் இவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்