ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 


இந்த போட்டியில் ராகுல், டி காக் ஓப்பனிங் களமிறங்கினர். 24 ரன்கள் எடுத்திருந்தபோது டி காக் அவுட்டாக, ராகுல் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். பாண்டே 38 ரன்கள் எடுக்க, ஸ்டாய்னிஸ் 10 ரன்கள் எடுக்க, தீபக் ஹூடா 15 ரன்கள் எடுக்க, ராகுல் மட்டும் அதிரடியை தொடர்ந்தார். 


9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 60 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார் ராகுல். இதில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அடித்த இரண்டு சதம் அடங்கும்.





ராகுலின் ஒன் மேன் ஷோவால், மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 தொடரில் முதல் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.  இதனால், 200 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வெற்றி கணக்கை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 6வது போட்டியிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது மும்பை அணி.






சேஸிங் களமிறங்கிய மும்பை அணி, டிவால்ட் ப்ரெவீஸ், சூர்யகுமார் யாதவ் தவிர மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கிறது மும்பை அணி. மிகவும் மோசமான ஒரு சீசனான அமைந்திருக்கிறது மும்பை அணிக்கு. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண