துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 






 


தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்," சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மகேந்திர சிங் தோனியை அன்புடன் வரவேற்க சென்னை காத்திருக்கிறது" என்று தெரிவித்தார்.






 


தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் பி.சேகர்பாபு தனது ட்விட்டர் பதிவில், " மீண்டு வருவது - இதுதான் சென்னையின் வழக்கம்" என்று கூறியுள்ளார். 


தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவின் மூலம் சென்னை அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 






 






 


இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும், டெல்லி அணியின் வீரருமான ரவிச்சந்திர அஷ்வின் தனது ட்விட்டர் பதிவில், " நான்காவது முறையாக கோப்பையைத் தக்க வைத்துக் கொண்ட சென்னை  அணிக்கும், எம்.எஸ் தோனிக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய கொல்கத்தா அணியிடம் புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.       


       


















நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பதிவில், "ஐபிஎல் போட்டித் தொடரில் வெற்றியடைய அதிகப்படியான விளையாட்டு பிரக்ஞை (விழிப்புணர்வு) தேவைப்பக்டுகிறது. தமிழ்நாட்டின் இதயத்துடிப்பாக விளங்கும் அந்த ஜார்கண்ட் மனிதனுக்கு இந்த பிரக்ஞை ஏராளமாக உள்ளது. அனுபவமும், பணிவும் இருந்தால் வயது தடையாக இருக்காது என்பதை நிரூபித்ததிற்கு நன்றி! சிஎஸ்கே" என்று பதிவிட்டார்.


       






இப்போட்டியில்  வெற்றி பெற்ற சென்னை அணிக்கு 12 கோடி ரூபாயும், தோல்வியடையும் அணிக்கு 6 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.