பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பஞ்சாப் அணியின் இளம் வீரர் முஷீர் கானை கிண்டல் செய்யும் விதமாக பேசியதாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
குவாலிஃபையர்-1
ஐபிஎல் 2025-ல் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின இந்தப்போட்டியில் டாஸில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது, இதன்படி பெங்களூரு அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சீண்டிய கோலி:
இப்போட்டியில் பஞ்சாப் அணி ஆறாவது விக்கெட்டை இழந்த பிறகு, அறிமுக வீரர் முஷீர் கான் தாக்க மாற்று வீரராக களமிறங்கியபோது கோலி அவரிடம் கிண்டல் செய்யும் விதமாக பேசியது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
முஷீர் கான் தனது முதல் பந்தை சந்திக்க தயாரான போது தண்ணீர் பாட்டில் தூக்கும் பையன் தானே என்று சொன்னதாக சமூக வலைதளங்களில் அந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.
கிளம்பிய எதிர்ப்பு:
இந்த ச்ம்பவம் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி, கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்களும் விமர்சகர்களும் கோலியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன, பலரும் ஒரு அறிமுக வீரருக்கு எதிராக பற்றிய கோலி பேசியது "வெட்கக்கேடானது" என்றும், தேவையற்றது என்றும் கூறி வருகின்றனர்.
மற்றொரு தரப்பு கோலி அவ்வாறு கூறவில்லை என்றும் நெருக்கடியான சூழலில் இளம் வீரரை பஞ்சாப் அணி இறக்கி உள்ளனர் என்று கோலி சாதரணமாக சொன்னதாக மற்றோரு தரப்பு கோலிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
பஞ்சாப் தோல்வி:
102 என்கிற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.