ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைப்பெற உள்ளது. இதற்காக எல்லா அணிகளும் தங்கள் வியூகங்களை வகுத்து வருகின்ற நிலையில் ஆர்சிபி அணி சிஎஸ்கே மற்றும் தமிழக வீரர்களுக்கு ட்ரையல்ஸ் நடத்தியுள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம்:
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெட்டா நகரில் வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி நடைப்பெறுகிறது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வியூகங்களை வருகிறது. மேலும் இளம் வீரர்களுக்கான ட்ரைஸ்களையும் அணிகள் நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக ஆர்சிபி மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது.
தினேஷ் கார்த்திக்கின் பிளான்:
பெங்களூரு அணியின் மெண்டராக தினேஷ் கார்த்திக் பதவியேற்றுள்ள நிலையில் பல உள்ளூர் வீரர்களை ஆர்சிபி அணிக்குள் கொண்டு வர திட்டங்களை தீட்டி வருகிறார். அவருடம் பவுலிங் பயிற்சியாளர் ஓம்கார் சால்வியும் உள்ளூர் வீரர்களை அடையாளம் காண்பதில் கெட்டிக்காரர். ஏற்கெனவே இருவரும் கொல்கத்தா அணியில் இணைந்து பணியாற்றி உள்ளதால் ஆர்பிசி அணியில் நல்ல திறமையான வீரர்களை கொண்டு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்
சிஎஸ்கே வீரர்கள் ஸ்கெட்ச்:
இந்த ட்ரையல்ஸில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த சிமர்ஜீத் சிங், தமிழக வீரர்களான குர்ஜன்பீரித் சிங், மணிமாறன் சிதார்த், சோனு யாதவ் ஆகியோர் இந்த ட்ரையல்ஸில் கலந்து கொண்டுள்ளனர். இதில் குர்ஜன்பீரித் சிங் சிஎஸ்கே அணிக்காக நெட் பவுலராக இருந்துள்ளார்.
அதே போல கடந்த ஆண்டு கேகேஆர் அணிக்காக விளையாடிய அங்ரிஷ் ரகுவன்சியும் இந்த ட்ரையல்ஸில் கலந்து கொண்டுள்ளார். கொலகத்தா அணிக்காக 7 இன்னிங்ஸ் ஆடி 163 ரன்கள் எடுத்தார்.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக 150கி.மீ வேகத்துக்கு பந்து வீசி அசத்தி இருந்தார்.
வழக்கமாக ஆர்சிபி அணி இந்த மாதிரி உள்ளூர் வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியில் ஆட வைக்காமல் பெஞ்ச்சில் உட்கார வைப்பார்கள்.
ஆனால் இந்த முறை ஐபிஎல் ஆடி அனுபவமுள்ள வீரர்களை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுக்க தயாராகி வருவது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சிஎஸ்கே மற்றும் தமிழக வீரர்களுக்கு குறி வைத்துள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.