சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரேவிஸ் அவுட்டானது சர்ச்சையை கிளப்பிய நிலையில் யார் மீது தவறு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
பிரேவிஸ் அவுட்:
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த பெங்களூரு நிர்ணயித்த 214 ரன்களை சென்னை அணி சேஸ் செய்த போது 17வது ஓவரின் மூன்றாவது பந்தில், ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சென்னை வீரர் டெவால்ட் பிரேவிஸ் எல்.பி.டபிள்யூ முறையில அவுட்டாகி வெளியேற்றினார். ஆனால் வழக்கமாக டிஆர்எஸ் டைமர் இந்த மாதிரி நேரத்தில் ஓடும், ஆனால் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் டிஆர்எஸ் டைமர் இயங்குவதைக் காட்டவில்லை.
மேலும் பிரேவிஸ் அம்பயர் அவுட் வழங்கியதை கவனிக்காமல் இரண்டு ரன்கள் எடுத்தார். பின்னர் நடுவர் அவருக்கு எல்பிடபிள்யூ அவுட் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். பிரேவிஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய டிஆர் எஸ் எடுத்தார், ஆனால் அதை அவர் உணர்ந்த நேரத்தில், டிஆர்எஸ் அழைப்புக்கான 15 வினாடி டைமர் காலாவதியானது.
டிஆர்எஸ் விதி என்ன சொல்கிறது?
DRS விதி முறையின்படி, நடுவரின் முடிவை சவால் செய்ய விரும்பும் எந்தவொரு அணியும் நடுவர் அவுட் கொடுத்த 15 வினாடிகளுக்குள் ரிவ்யூ மேற்கொள்ள
வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அந்த அணியால் ரிவ்யூ எடுக்க முடியாது. மேலும் நடுவர் அவுட் கொடுத்தால் பந்து அதோடு டெட் பால் ஆகிவிடும். அதனால் பிரெவிஸின் நீக்கம் தொழில்நுட்ப குழப்பத்தின் விளைவாக இருக்கலாம், ஆனால் அது கிரிக்கெட் விதிகளின் கீழ் செல்லுபடியாகும்.
தவறு செய்த ஜடேஜா:
ஆனால் இந்த அவுட்டில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் அம்பயர் தவறு செய்தாலும், சென்னை அணி வீரர்கள் அவுட் கொடுத்ததை கூட கவனிக்காமல் ரன் ஓடியது தான் மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. அதுமிட்டமில்லாமல் சீனியர் வீரரான ஜடேஜா உடனடியாக பிரேவிஸை அழைத்து டிஆர் எஸ் எடுக்க சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால் அவரும் நடுவரை கவனிக்காமல் இரண்டு ரன்களை நோக்கி ஒடியது பிரேஸ்சின் விக்கெட்டுக்கு காரணமாக அமைந்தது, மேலும் இந்த அவுட் குறித்த சர்ச்சை பரவிய நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பிரேவிஸ் ரன் எடுக்க 25 விநாடிகள் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் இந்த அவுட் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சற்று போட்டிக்கு ஏற்ப சிந்தித்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி அமைந்து இருக்கும்.