KL Rahul : ”எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்” மகிழ்ச்சியில் கே.எல் ராகுல்.. பூரிப்பில் பார்த் ஜிண்டால்

Parth Jindal: நான் ஒருபோதும் (ஐபிஎல்) வென்றதில்லை. டெல்லி வெற்றி பெற்றதில்லை, ஒன்றாகச் கோப்பையை வெல்ல முயிற்சிப்போம் என்று கே.எல் ராகுல் தங்களிடம் தெரிவித்தாக டெல்லி இணை உரிமையார் தெரிவித்தார்.

Continues below advertisement

IPL 2025 மெகா ஏலத்தில் கையெழுத்திட்ட பிறகு, கே.எல் ராகுல் தனது புதிய அணியில் இருந்து "அன்பு மற்றும் ஆதரவை" எதிர்ப்பார்ப்பதாக டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் தெரிவித்தார்.

Continues below advertisement

ஐபிஎல் மெகா ஏலம்:

ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களில் ஒருவராக கே.எல் ராகுல் உருவெடுத்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அவரை தக்கவைக்காமல் வெளிவிட்ட பிறகு, மெகா ஏலத்தில் ராகுல் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியால் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டார். ஐபிஎல் கோப்பையை வெல்லாத சில அணிகளில் ஒன்றாக இருக்கும் டெல்லி, தங்கள் யுக்திகளை மாற்றி இந்த, ஐபிஎல் 2025 மெகா ஏலத்திலிருந்து புத்திசாலித்தனமாக வீரர்களை தங்கள் அணியில் அள்ளிப்போட்டது டெல்லி கேபிடல்ஸ். 

இதையும் படிங்க: Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்

பார்த் ஜிண்டால் பேச்சு:

டெல்லி கேப்பிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், ESPNcricinfo உடன் பேசும்போது, ​​கே.எல் ராகுல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைய உற்சாகமாக இருப்பதாக பகிர்ந்து கொண்டார், புதிய உரிமையாளரிடமிருந்து "அன்பு" மற்றும் "ஆதரவு" ஆகியவற்றை எதிர்ப்பார்ப்பதாக கூறி தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். நானும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, அதனால் டெல்லியுடன் இணைந்து கோப்பையை வெல்வோம் என்று ராகுல் நம்பிக்கை தெரிவித்தார்.

"அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்( கே.எல் ராகுல்), டெல்லியின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு என்னை நீண்ட நாட்களாக தெரியும். ராகுல் பெங்களூர் (பெங்களூரு) பையன். எனக்கு பெங்களூரு எஃப்சி (இந்தியன் சூப்பர் லீக்கில்) சொந்தமானது, அதனால் அவர் என்னுடன் சில ஆட்டங்களைப் பார்த்திருக்கிறார். அவருடைய மனைவி அதியாவை  எனக்கு நன்றாகத் தெரியும். அவள் மும்பையில் வளர்ந்து வரும் நெருங்கிய குடும்ப நண்பராக இருக்கிறார்.

கே.எல் ராகுல்:

"எனவே அவர் (ராகுல்), 'நான் நல்ல கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று எங்களிடம் கூறினார், மேலும் நான் உரிமையாளரிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெற விரும்புகிறேன். நான் மரியாதையைப் பெற விரும்புகிறேன், பார்த் உங்களிடமிருந்து அது கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும், நான் அதைப் பெறுவேன், மேலும் ஒரு நண்பருக்காக விளையாடுவதில் எனக்கு மிகுந்த உற்சாகம், டெல்லியை வெற்றி பெறச் செய்வோம். நான் ஒருபோதும் (ஐபிஎல்) வென்றதில்லை. டெல்லி வெற்றி பெற்றதில்லை, ஒன்றாகச் கோப்பையை வெல்ல முயிற்சிப்போம்.’’ என்று ராகுல் தங்களுக்கு சொன்னதை பாரத் ஜிண்டால் தெரிவித்தார்.

கோட்லாவில் ரன் மழை உண்டு:

ராகுலின் பேட்டிங் மற்றும்  ஆட்டத்திற்னை ஜிண்டால் பாராட்டினார், அவர் முதல் நான்கு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் பேட் செய்ய முடியும் என்று குறிப்பிட்டார். ஒரு பேட்டராக ராகுலின் நிலைத்தன்மையையும( stability) ஜிண்டால் எடுத்துரைத்தார். ராகுல் தனது கடந்த ஏழு ஐபிஎல் சீசன்களில் ஆறில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நீண்ட நேரம் நின்று ஆடக்கூடிய உறுதியான பேட்ஸ்மேன் என்று நான் கூறுவேன். மைதானத்தின் அளவைக் கொண்டு அவர் கோட்லாவில் ரன் பொழிவார் என்று நம்புகிறோம்.அவர் முதல் நான்கு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் பேட் செய்ய முடியும், அது ஒருவருக்கு மிகவும் அரிதான திறமை. அவர் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் சிறந்த மூத்த வீரர், விளையாட்டிலும் சிறந்த மனம் கொண்டவர். மேலும் அவர் ஒரு சிறந்த பிராண்ட் அம்பாசிடர். அவர் மிகவும் கண்ணியமானவர், மென்மையானவர், தேவைப்படும்போது ஆக்ரோஷமானவர். மேலும் அவர் உங்களுக்கு வழங்கும் மிகத் தெளிவான விஷயம் 450 ரன்கள் (ஒரு சீசனில்) உத்தரவாதம், இது அவர் தனது முழு (ஐபிஎல்) வாழ்க்கையையும் செய்த ஒன்று. எனவே அத்தகைய நிலைத்தன்மையைக்( Stability) காண்பது அரிது என்று பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement