மகளிர் ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே வலுவான அணியாக உலா வரும் டெல்லி அணி இன்று குஜராத் அணியை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.


மேக்னா, ஹர்லீன் தியோல், ஆஷ் கார்ட்னர், மேகலதா, ஜார்ஜியா என்ற நட்சத்திரங்களை கொண்ட குஜராத் அணி மிகப்பெரிய ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு மரிஜானே காப் பெரிய தலைவலியாக மாறினார்.




ஆட்டத்தின் முதல் ஓவரின் 2வது பந்திலே மேக்னாவை ஸ்டம்புகளை பறக்கவிட்டு போல்டாக்கினார். குஜராத் 9 ரன்களை எட்டியிருந்தபோது லாரா 1 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் மிகவும் முக்கியமான அதிரடி வீராங்கனையான ஆஷ் கார்ட்னர் களமிறங்கினார். அவரை அவர் சந்தித்த முதல் பந்திலே எல்.பி.டபுள்யூ ஆக்கி பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்.


18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த குஜராத் அணிக்கு நம்பிக்கை தந்த ஹர்லீன் தியோல் 20 ரன்களில் இருந்தபோது காப் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். விக்கெட் கீப்பர் சுஷ்மா வெர்மாவையும் 2 ரன்னில் அவுட்டாக்கினார். 33 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய குஜராத் அணியின் 5 விக்கெட்டுகளை மாரிஜானே காப் மட்டுமே கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய மாரிஜானே காப் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.




33 வயதான காப் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு வீராங்கனை ஆவார். தற்போது டெல்லி அணிக்காக ஆடி வரும் இவர் பெர்த் ஸ்கார்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். பந்துவீச்சு வீராங்கனையாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசகாய சூராங்கனை காப். இவர் இதுடரை 129 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 11 அரைசதங்கள் உள்பட 2367 ரன்களை எடுத்துள்ளார். 94 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்கள் உள்பட 1178 ரன்களை எடுத்துள்ளார்.


ஒருநாள் போட்டியில் இதுவரை 147 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 76 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த தொடர் தொடங்கியது முதலே அதிகளவில் டாட் பந்துகளை வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலிலும் மாரிஜானே காப் 55 டாட் பந்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதிக வயதில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையையும் 32 வயதில் காப் படைத்துள்ளார். 2009ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான காப் 2013ம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 102 ரன்களை கட்டாக்கில் விளாசினார். உலககக்கோப்பையில் தென்னாப்பிரிக்க வீராங்கனை ஒருவர் விளாசிய அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.  


மேலும் படிக்க: பெண் நடுவரை கட்டிப்பிடிக்க சென்ற சயீத் அஃப்ரிடி… வைரலாகும் லெஜெண்ட்ஸ் லீக் போட்டி வீடியோ!


மேலும் படிக்க: Virat Kohli: சொந்த மண்ணில் 4 ஆயிரம் ரன்கள்.. பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரையன் லாரா..! சாதனை மேல் சாதனை படைத்த கோலி..!