ஐபிஎல் 2023 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சோதனை காலமாகவே இருந்து வருகிறது. அது மைதானத்திற்கு உள்ளேஎ இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி... 


இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி அதில் 2 ல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இப்படி இருக்க, டெல்லி கேபிடல்ஸ் அணி ஒன்றன் பின் ஒன்றாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு டெல்லி அணியை சேர்ந்த வீரர் ஒருவரின் கிட் பேக் காணாமல் போய், ஒரு வாரத்திற்கு பின்பு கிடைத்தது.


இந்தநிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு பிறகு டெல்லியை சேர்ந்த வீரர் ஒருவர், ஹோட்டலில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி நிர்வாகத்திற்கு அணி நிர்வாகம் கடுமையான விதிகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி, டெல்லி அணி வீரர்கள் இரவு 10 மணிக்கு மேல் தங்களுக்கு தெரிந்தவர்களை அறைகளுக்கு அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்துள்ளது. 


புதிய விதிகள்:



  • டெல்லி அணி வீரர்கள் இரவு 10 மணிக்கு மேல் தங்களுக்கு தெரிந்தவர்களை அறைகளுக்கு அனுமதிக்க கூடாது. அப்படி கட்டாயம் பார்க்க விரும்பினால் ஹோட்டலின் உணவகம் அல்லது காபி ஷாப்பில் பார்த்து கொள்ளலாம்.

  • வீரர்கள் யாரையாவது சந்திக்க தங்கள் ஹோட்டலை விட்டு வெளியேற விரும்பும் போது அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

  • மனைவிகள் மற்றும் தோழிகள் அனுமதிக்கப்படுகிறார்கள் ஆனால் அவர்களின் சொந்த செலவில் தங்களது வைத்து கொள்ளலாம்.

  • வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் குழுவில் சேர்வதற்கு முன்பு அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

  • அனைத்து வீரர்களும் அணியின் மீட்டிங் மற்றும் பயிற்சியின்போது கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும்.

  • அவ்வாறு மீறினால் வீரர்ஜ்களுக்கு அபராதம் அல்லது ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்படும்.


அக்ஸர் படேல் கேப்டனா..? 


டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் அக்ஸர் படேலை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ அக்ஸர் படேல் ஒரு சிறந்த வீரர், சிறந்த பார்மில் உள்ளார். தொடர்ந்து டெல்லி அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக பங்களிப்பை வழங்கி வருகிறார். டெல்லி அணி போட்டியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே, அக்ஸர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


 டெல்லி கேபிடல்ஸ் முழு அணி விவரம்:


ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), ரிப்பல் படேல், மனிஷ் பாண்டே, ரிலீ ரோசோவ், ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, , லுங்கி என்கிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், பில் சால்ட், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்