ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணிகள் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்..


டெல்லி - ராஜஸ்தான் மோதல்:


ஐபிஎல் 2023 தொடரின் 11 வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.  கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது உள்ளூர் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த வார தொடக்கத்தில் பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இருப்பினும் இந்த போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதேநேரம், முதல் லீக் போட்டியி ல் அபார வெற்றி பெற்றது. அதேநேரம், வார்னர் தலைமையிலான டெல்லி அணி இதுவரை விளையடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், மீண்டும் வெற்றிப்பதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணியும், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய டெல்லி அணியும், முனைப்பு காட்டுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரு அணிகள் சார்பில் களமிறங்கும் வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்


ராஜஸ்தான் பிளேயிங் லெவன்:


பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிமரன் ஹெட்மேயர், துருவ் ஜூரல், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா. யுஸ்வேந்திர சாஹல்


ராஜஸ்தான் இம்பேக்ட் பிளேயர்ஸ்:


நவ்தீப் ஷைனி,  ஆகாஷ் வைஷத், முருகன் அஷ்வின், ஆஷிப், டொனோவன் ஃபெரெய்ரா


டெல்லி அணி பிளேயிங் லெவன்:


டேவிட் வார்னர் (கேப்டன்), மணீஷ் பாண்டே, ரிலே ரோஸ்ஸோவ், மிட்செல் மார்ஷ், ரோவ்மேன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்


டெல்லி அணி இம்பேக்ட் பிளேயர்ஸ்:


அமன் கான், பிரித்வி ஷா, ஷர்ப்ராஸ் கான், இஷாந்த் சர்மா, , பிரவின் தூபே


 


நேருக்கு நேர்:


கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இரண்டு முறை மோதியது. இதில், இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றிபெற்றன. 


விளையாடிய போட்டிகள் - 26
ராஜஸ்தான் ராயல்ஸ் வென்ற போட்டிகள் - 13
டெல்லி கேப்பிட்டல்ஸ் வென்ற போட்டிகளில் - 13
கைவிடப்பட்ட போட்டிகள் - 0
டை - 0


கடந்த 5 ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டிகள்:


ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதியபோது  மிட்செல் மார்ஷ் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து டெல்லி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார்.