தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. இந்த போட்டியானது ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் எதிர்பார்ப்பானது புதிய உச்சத்தை தொடும்.


இந்த போட்டிக்கு முன்பு, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) ஒரு சிறப்பு விழாவை ஏற்பாடு செய்துள்ளது. அதில், கடந்த 2011 ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது தோனி சிக்ஸர் அடித்து கோப்பையை வென்று கொடுத்தார். இதையடுத்து, தோனி அடித்த சிக்ஸரை நினைவுபடுத்த அங்கு அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று தோனி திறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மகாலா களமிறங்குகிறாரா..? 


தென்னாப்பிரிக்க நட்சத்திர பந்துவீச்சாளர் சிசண்டா மகாலா, தென்னாப்பிரிக்காவில் நடந்த SAt20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல், நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தநிலையில், மிட்செல் சாண்டனருக்கு பதிலாக சிசண்டா மகாலா சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் இன்று அறிமுகமாகலாம். சாண்டனருக்கு பதிலாக மகாலா எடுக்க காரணம் , வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே, கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சென்னை அணி எடுத்து செல்லும். 


பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா..? 


கால் வலி காரணமாக சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் பத்து நாட்கள் ஓய்வெடுக்க சிஎஸ்கே மருத்துவக்குழு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் இடம்பெறுவது சந்தேகம்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு ஸ்டோக்ஸை சிஎஸ்கே வாங்கியது. இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். ஸ்டோக்ஸ் இல்லாத பட்சத்தில் தென்னாப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ் விளையாட வாய்ப்புள்ளது.


மும்பை அணியில் சந்தீப் வாரியருக்கு வாய்ப்பா..? 


காயம் காரணமாக மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக சந்தீப் வாரியர் விளையாட இருக்கிறார். அண்டர் 19 போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள வாரியர் இதுவரை 68 டி20 போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளில் இடம் பெற்றிருந்தார். 


 புள்ளிவிவரங்கள்:


வான்கடே ஸ்டேடியம் முதல் இன்னிங்ஸ் சராசரி 167 உடன் அதிக ஸ்கோரைப் பெற்ற மைதானங்களில் ஒன்றாகும். சராசரி வெற்றியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 181 ஆகும்.


கணிக்கப்பட்ட அணிகள் விவரம்:


மும்பை அணி:  ரோஹித் ஷர்மா (கேப்டன்) , இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, டிம் டேவிட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் வாரியர்


இம்பாக்ட் வீரர்: ராமன்தீப் சிங்


சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயின் அலி , அம்பதி ராயுடு , ஷிவம் துபே , ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்), டுவைன் பிரிட்டோரியஸ், சிசண்டா மகலா மகலா, தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்


இம்பாக்ட் வீரர்: துஷார் தேஷ்பாண்டே