ஐபிஎல் சீசனின் 12 வது போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை இடையேயான போட்டி என்றால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சென்னை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதால், 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், டெவோன் கான்வே 47 ரன்களும் எடுத்தனர். 

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியும் கடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் மிகப்பெரிய அடி வாங்கியது. அதனால், இன்றைய போட்டியை எப்படியாவது வெல்ல முயற்சிக்கும். 

CSK vs MI ஹெட் டு ஹெட்:

இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் மொத்தம் 34 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இதில், மும்பை அணி 20 போட்டிகளிலும், சென்னை அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

விளையாடிய போட்டிகள் சிஎஸ்கே வெற்றி  மும்பை வெற்றி முடிவு இல்லை
34 14 20 0

பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள்:

ஐபிஎல்-ல் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா (710), ரோஹித் சர்மா (679) மற்றும் எம்எஸ் தோனி (653) ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ அதிக விக்கெட்டுகளை (35), லசித் மலிங்கா (31) மற்றும் ஹர்பஜன் சிங் (26) ஆகியோர் வீழ்த்தியுள்ளனர்.

மும்பை வான்கடே மைதானம்:

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றன, வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதிலும் 7 வெற்றியுடன் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வான்கடே ஸ்டேடியத்தில் சென்னைக்கு எதிரான போட்டிகளில் மும்பை 70% வெற்றி சாதனை படைத்துள்ளது. 

  • விளையாடிய போட்டிகள் - 10
  • மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் - 7
  • சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற போட்டிகள் - 3
  • முடிவு இல்லாத போட்டிகள் - 0

கடந்த 5 மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டிகள்:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதில், கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் கடைசி பந்தில் கிடைத்தது. 

மும்பை இந்தியன்ஸ் விளையாடும் லெவன்:  ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேயா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் லெவன் : டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட்), அம்பதி ராயுடு. மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்