Just In





IPL 2025 DC vs LSG: கே. எல். ராகுல் ஏன் விளையாடல தெரியுமா? இதான் காரணம்! வாழ்த்து சொல்லுங்க!
Athiya Shetty and KL Rahul: கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.

கிரிக்கெட் பிரபலம் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஐ.பி.எல். 4-வது லீக் போட்டி:
ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் போட்டி, ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கவில்லை.
தேவதையை வரவேற்க...
கே.எல். ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருந்தார். இருவருக்கும் பெண் குழந்தைப் பிறந்துள்ளதாக அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட லக்னோவுக்கும் கேஎல் ராகுலுக்கும் எதிரான ஃபைட் இன்று நடக்கவில்லை. டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் அவரது அணியின் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைப் பிறக்கும்போது மனைவியுடன் இருப்பதற்காகவும் குழந்தையை வரவேற்கவும் குடும்பத்தினருடன் இருந்தார். அதனாலேயே போட்டியில் பங்கேற்கவில்லை.