T Natarajan: நடராஜனை பெஞ்சில் உட்கார வைத்த டெல்லி.. நடராஜனுக்கு என்னாச்சு ?
IPL 2025 DC vs LSG: " டெல்லி அணிக்காக 10.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட நடராஜன், முதல் போட்டியில் கலந்து கொள்ள ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது."

DC Vs LSG: டெல்லி அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் மற்றும் டி. நடராஜன் ஆகியோர் முதல் போட்டியில் விளையாடாதது, அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் 4-வது லீக் போட்டி, ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பண்ட், தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது.
டெல்லி கேப்பிடள்ஸ் ப்ளேயிங் லெவன்:
ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், ஃபாப் டுப்ளசிஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்,சமீர் ரிஸ்வி,விப்ராஜ் நிகம், மிட்சல் ஸ்டாக், குல்தீப் யாதவ், மோஹித் ஷர்மா, முகேஷ் குமார்.
கே.எல் ராகுல் இடமில்லை
பெரிதும் எதிர்பார்த்த வீரராக இருந்த கே.எல் ராகுல் இந்தப் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுல் இந்த போட்டியில் விளையாடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும், இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
தமிழக நடராஜனுக்கு என்னானது ?
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் டெல்லி அணி 10.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், யாக்கர் என சொல்லக் கூடிய பந்து வீசுவதில் வல்லவர். டெல்லி அணிக்காக அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டதால், இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வேகப்பந்து பேச்சாளர், மிட்சல் ஸ்டாக்வுடன் இணைந்து பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் இணைந்து பந்து வீசினால் அபாயகரமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்தநிலையில் இந்த போட்டியில், நடராஜன் கலந்து கொள்ளாதது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. நடராஜன் உடல் தகுதி பெறாததால் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அவருக்கு, தோல்பட்டை காயம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் இருந்து நடராஜர் முழுமையாக மீளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில போட்டிகளிலும் நடராஜன் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.