ஐபிஎல் 2023 இன் 17வது லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்.எஸ். தோனியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சனும் தலைமை தாங்குகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான சமீபத்திய போட்டிகளில் ராஜஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தியது. 

நேருக்கு நேர்:

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை அணி 15 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வெற்றி கண்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஐந்து மோதல்களில் 4 ல் வெற்றிபெற்றுள்ளது.

இருப்பினும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. அதில், சென்னை அணி 6 முறையும், ராஜஸ்தான் ஒரு முறை வெற்றிபெற்றுள்ளது. 

புள்ளிவிவரங்கள் போட்டிகள் சென்னை வெற்றி  ராஜஸ்தான் வெற்றி
ஒட்டுமொத்தம்  26 15 11
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 6 1
கடைசி 5 போட்டிகள் முடிவு 5 1 4
ஐபிஎல் 2022 1 0 1

1வது பேட்டிங், 2வது பேட்டிங் - ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ்

இன்னிங்ஸ் சென்னை வெற்றி ராஜஸ்தான் வெற்றி
முதல் பேட்டிங் 8 3
இரண்டாவது பேட்டிங் 7 8

முழு புள்ளிவிவரங்கள்:

புள்ளிவிவரங்கள் சிஎஸ்கே ஆர்.ஆர்
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் முரளி விஜய்- 127 ஷேன் வாட்சன் - 101
சிறந்த பேட்டிங் சராசரி டுவைன் பிராவோ- 106.50 நமன் ஓஜா- 87.0
அதிக ரன்கள் சுரேஷ் ரெய்னா- 630 ஷேன் வாட்சன்- 480
சிறந்த பொருளாதார விகிதம் நுவன் குலசேகர- 4.25 க்ளென் பிலிப்ஸ்- 3.0
அதிக விக்கெட்டுகள் ரவீந்திர ஜடேஜா - 17 சோஹைல் தன்வீர் - 10
சிறந்த பந்துவீச்சு புள்ளிகள் லட்சுமிபதி பாலாஜி- 4/21 சோஹைல் தன்வீர்- 6/14

கணிக்கப்பட்ட இரு அணி வீரர்கள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே): டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்& விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே

 ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்): ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்