முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். 


கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க தடுமாறி வந்த ருதுராஜ், சிராஜ் வீசிய 3வது ஓவர் 2 வது பந்தில் பௌண்டரியை தெறிக்க விட்டார். தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஹசல்வுட் வீசிய நான்காவது பந்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் 17 ரன்களில் LBW முறையில் அவுட் ஆனார். 


அடுத்ததாக உள்ளே வந்த மொயின் அலி, மேக்ஸ்வல் வீசிய 7 வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கையினால் ரன் அவுட்டாகி வெளியேறினார். சென்னை அணியில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் சரிந்த நிலையில், அணியின் நிலைமை அவ்வளவுதான் என்று நினைத்தபோது உத்தப்பாவுடன் இணைந்த சிவம் துபே அதிரடி காட்ட, சென்னை அணியின் ரன் எண்ணிக்கை சரசரவென உயர்ந்தது. 


தொடர்ந்து இருவரும் அதிரடிகாட்ட  சென்னை அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 33 பந்துகளில் அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து சிவம் துபேவும் 30 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். இந்த ஜோடி அதன்பிறகு 5 வது கியரை எடுக்க, சென்னை அணியின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது. 


சிராஜ் வீசிய 17 வது ஓவரில் உத்தப்பா, இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரியை ஓடவிட்டார். அதுக்கு அடுத்த ஓவரில் துபே தன் பங்கிற்கு 2 சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்து மிரட்டினார்.


ஹசரங்கா வீசிய 19 வது ஓவரில் சென்னை அணி 200 ரன்களை கடந்த நிலையில், அடித்து ஆடிய ராபின் உத்தப்பா 88 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து உள்ளே வந்த ஜடேஜாவும் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.  கடைசி ஓவரில் துபே தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 94 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 216 ரன்கள் எடுத்துள்ளது. 


இன்றைய பார்ட்னர்ஷிப் : 




165 ஆர் உத்தப்பா - எஸ் துபே vs ஆர்சிபி 2022

 

இந்த தொடரின் இந்த ஜோடி இரண்டாவது 85+ ஸ்கோர் : 

 

ஐபிஎல் தொடரில் 2 CSK பேட்டர்கள் 85+ ரன்கள் எடுத்தது முதல் முறையாகும். மற்ற அணிகளை பொறுத்தவரை இது 3வது நிகழ்வாகும். 

 

ஐபிஎல்லில் ஒரு அணிக்காக 85+ ரன்கள் எடுத்த 2 பேட்டர்கள்:


டிவிலியர்ஸ் 129*, கோஹ்லி 109 vs GL, 2016
பேர்ஸ்டோவ் 114*, வார்னர் 100 எதிராக RCB, 2019
டியூப் 95*, உத்தப்பா 88 vs RCB, 2022


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண