ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று(மே1) நடைபெறும் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியது. அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல், சாம் கர்ரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 லீக் போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கிறது.


நேருக்கு நேர்:


ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இதுவரை 28 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் 13 முறையும் வெற்றிபெற்றுள்ளது


அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸின் கோட்டையாக விளங்குகிறது சேப்பாக்கம் மைதானம். இங்கு சென்னை அணி மிகவும் வலிமையானது, தோற்கடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பிட்ச் உதவுவதால், இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது சற்று கடினம்.


டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்:


இந்த சீசனில் சேப்பாக்கத்தில் உள்ள ஆடுகளம் முதல் இன்னிங்ஸில் பந்துவீசுவதற்கு சாதகமான சூழ்நிலையை கொடுத்துள்ளது. எனவே டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியான பேட்டிங்கை தொடங்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


 


சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):


அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர் ), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ரிச்சர்ட் க்ளீசன், முஸ்தாபிசுர் ரஹ்மான்.


பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):


ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன்(கேப்டன்), ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பார் ), அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்