ஐபிஎல் 2024ன் 49வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தோற்கடித்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக முழு மன உறுதியுடன் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை துரத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் எப்படி..? 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அந்த அணி தற்போது 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. 


சென்னை - பஞ்சாப் இதுவரை: 


ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இதுவரை 28 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் 13 முறையும் வெற்றிபெற்றுள்ளது. 


பிட்ச் ரிப்போர்ட்: 


சென்னை சூப்பர் கிங்ஸின் கோட்டையாக விளங்குகிறது சேப்பாக்கம் மைதானம். இங்கு சென்னை அணி மிகவும் வலிமையானது, தோற்கடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பிட்ச் உதவுவதால், இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது சற்று கடினம். இந்த சீசனில் சேப்பாக்கத்தில் உள்ள ஆடுகளம் முதல் இன்னிங்ஸில் பந்துவீசுவதற்கு சாதகமான சூழ்நிலையை கொடுத்துள்ளது. எனவே டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம். 


வானிலை அறிக்கை:


சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி சென்டிகிரேடாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 ஆகவும் உள்ளது. மழை பெய்ய வாய்ப்பில்லை, பகல் முழுவதும் அனல் காற்று வீசலாம். அதன் தாக்கம் இரவு நேரங்களில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


சென்னை சூப்பர் கிங்ஸ்: 


ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, முஸ்தபிசுர் ரஹ்மான்


பஞ்சாப் கிங்ஸ்:


பிரப்சிம்ரன் சிங்/ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்


முழு அணி விவரம்:


பஞ்சாப் கிங்ஸ் அணி: ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன்(கேப்டன்), ரிலீ ரோசோவ், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல் , ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், ரிஷி தவான், வித்வா தவான், கவேரப்பா, சிவம் சிங், பிரின்ஸ் சவுத்ரி, விஸ்வநாத் சிங், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, தனய் தியாகராஜன், லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராசா, கிறிஸ் வோக்ஸ், ஹர்பிரீத் சிங் பாட்டியா, ஷிகர் தவான்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன், டேரில் மிட்செல், மொயின் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா, சமீர் ரிஸ்வி, ஷர்துல் தக்வாட் ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், மகேஷ் தீக்ஷனா, நிஷாந்த் சிந்து, ஆரவெல்லி அவனிஷ், ரிச்சர்ட் க்ளீசன்