ஐபிஎல் 16வது சீசன் 49வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மதியம் 4 மணிக்கு தொடங்குகிறது. 


இரு அணிகளும் முன்னதாக மோதிய முதல் போட்டியில் 158 ரன்கள் இலக்கை 18.1 ஓவர்களில் துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள சென்னை அணி, இதுவரை 10 போட்டிகளில் 5 வெற்றியும், 4ல் தோல்வியும் சந்தித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான முந்தைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த்துள்ள சென்னை அணி இந்த போட்டியில் மீண்டும் எழும் என்ற நம்பிக்கையில் உள்ளது. 


மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மும்பை, கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்தனர். லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியான அரைசதத்தால் பஞ்சாப் அணி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. பியூஸ் சாவ்லா 4 ஓவர்களில் வெறும் 29 ரன்களுக்கு 2 விக்கெட்களை எடுத்தார். 


அடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் ரோகித் சர்மாவும், 6வது ஓவரில் கேமரூன் கிரீனையும் இழண்ட்து. அதன்பிறகு இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையேயான 116 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டாக,  டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா 38 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தனர்.


சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை அணி 3 முறை வெற்றிபெற்றுள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 144 ஸ்டிரைக் ரேட்டில் 414 ரன்கள் குவித்த டெவோன் கான்வே 13 சிக்ஸர்கள் மற்றும் 50 பவுண்டரிகள் விளாசியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் 145 ஸ்டிரைக் ரேட்டில் 354 ரன்கள் எடுத்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துஷார் தேஷ்பாண்டே சிறந்த பந்துவீச்சாளராகவும், சராசரியாக 21 மற்றும் 10.78 எகானமி ரேட்டிலும் பந்துவீசினாலும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


இரு அணிகளிலும் சிறந்து விளங்கிய வீரர்கள்: 



  • டெவான் கான்வே - 414 ரன்கள்

  • ருதுராஜ் கெய்க்வாட் - 354 ரன்கள்

  • இஷான் கிஷான் - 286 ரன்கள்

  • திலக் வர்மா - 274 ரன்கள்

  • சூர்யகுமார் யாதவ் - 267 ரன்கள் 


சென்னை சிதம்பரம் மைதானம் எப்படி..? 



  • மொத்தப் போட்டிகள் - 125

  • முதலில் பேட்டிங் செய்து வெற்றி - 66

  • இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி  - 57

  • முதலில் பேட்டிங் அணியின் சராசரி ஸ்கோர்  - 158

  • அதிகபட்ச ஸ்கோர் - சென்னை சூப்பர் கிங்ஸ் 246/5

  • குறைந்த ஸ்கோர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 70/10


கணிக்கப்பட்ட அணி விவரம்: 


சென்னை சூப்பர் கிங்ஸ்: 


டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, எம்எஸ் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மகேஷ் தீக்ஷனா, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே


மும்பை இந்தியன்ஸ்: 


ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால்