Deepak Chahar Love Proposal | அழகா இருக்கேன்னு நினைக்கல.. பயமாயிருக்கு.. க்ரவுண்டிலேயே காதலைச் சொன்ன சி.எஸ்.கேவின் தீபக் சாஹர்

துபாய் மைதானத்தில் போட்டி நிறைவு பெற்ற பிறகு கேலரியில் இருந்த தனது காதலியிடம் தீபக் சாஹர் தனது காதலை கூறினார். தீபக் சாஹரின் காதலை அவரும் ஏற்றுக்கொண்டார்.

Continues below advertisement

சென்னை- பஞ்சாப் அணிகள் ஆட்டம் இன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி பவுண்டரி அடித்தபோதும், சென்னை அணியினர் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றிய போதும் கேலரியில் இருந்த கருப்பு நிற பெண் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் அதை கொண்டாடினார். இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Continues below advertisement


போட்டி நிறைவு பெற்ற பிறகு, கேலரியில் இருந்த அந்த பெண்ணிடம் சென்னை அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் நேராக சென்று அமைதியாக நின்றார். பின்னர், அனைவரும் சுற்றி நிற்க சற்றும் எதிர்பாராத தருணத்தில் அந்த பெண்ணின் முன் அமர்ந்து மோதிரத்தை நீட்டி தனது காதலை தெரிவித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் சந்தோஷத்தின் உச்சத்தில் துள்ளிக்குதித்தார். பின்னர், தீபக் சாஹரின் காதலை ஏற்றுக்கொள்வதாக சந்தோஷத்துடன் கூறி தீபக் சாஹரை கட்டியணைத்துக் கொண்டார். சுற்றியிருந்த அனைவரும் இளம் காதல் ஜோடியினருக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர். தீபக் சாஹரின் அருகில் இருந்த ஒருவர் அந்த பெண் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று ஆரவாரத்துடன் கத்தினார்.


பின்னர், அந்த மோதிரத்தை தனது காதலியின் விரலில் அணிவித்தார். மகிழ்ச்சி தாங்காத தீபக் சாஹரின் காதலி, தீபக் சாஹர் கன்னத்தில் அன்பு முத்தமிட்டார். பின்னர், தன்னிடம் இருந்த இன்னொரு மோதிரத்தை அந்த பெண்ணிடம் அளித்த தீபக் சாஹர் அந்த மோதிரத்தை தனக்கு அணிவிக்குமாறு அன்புடன் அளித்தார். தீபக் சாஹர் காதலி அந்த மோதிரத்தை வாங்கி மகிழ்ச்சியுடன் அந்த மோதிரத்தை தீபக் சாஹருக்கு அணிவித்தார். தீபக் சாஹரின் காதலியின் பெயர் ஜெயா பிரதாப் என்று கூறியுள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola