2021 ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையோடு லீக் போட்டிகள் முடிவடைய இருக்கும் நிலையில், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகளும், இரவு 7.30 தொடங்கும் போட்டியில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளும் போட்டியிடுகின்றன. 


டெல்லி, சென்னை, பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. ஹைதராபாத்தை அடுத்து ராஜஸ்தானும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது. இந்நிலையில், நான்காவது இடத்திற்காக கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 









 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டியின் முடிவில், பஞ்சாப் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதால், போட்டி முடிவில் பஞ்சாப்பின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பற்றி தெரிந்துவிடும். அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் இரவு போட்டியில், ராஜஸ்தானுக்கு இது ஆறுதல் போட்டியாக மட்டுமே இருக்கும். ஆனால், கொல்கத்தாவுக்கு இது கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியாகும்.




ரன் ரேட் அடிப்படையில், மும்பை, பஞ்சாப் அணிகளைவிட முன்னிலை பெற்றிருந்தாலும், பெரு வாரியான ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகசமாகும். எனினும், கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மும்பை, பஞ்சாப் அணிகளின் போட்டி முடிவுகளை பொருத்து உறுதியாகும்.

 

கொல்கத்தா vs ராஜஸ்தான் 

 

இதுவரை ஐபிஎல் வரலாற்றில், 23 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா 12 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெறும் ஷார்ஜா மைதானத்தில் இருக் அணிகளும் மோதியதில்லை.  முதலில் பேட்டிங் செய்து ராஜஸ்தான் 8 முறையும், கொல்கத்தா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் செய்து ராஜஸ்தான் 3 முறையும், கொல்கத்தா 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண