ஐபிஎல் தொடரின் 16வது சீசன் லீக் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி வருகின்ற 21ம் தேதியுடன் முடிவடைகிறது. லீக் போட்டியின் முடிவுகளை பொறுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுகளில் மோதும்.
புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணி முதலாவது தகுதி சுற்று போட்டியில் வருகின்ற 23ம் தேதியும், 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் வருகின்ற 24ம் தேதியும் மோதுகின்றன. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தநிலையில், சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என நேற்று அணி நிர்வாகம் அறிவித்தது. ஸ்டேடியத்தில் உள்ள கவுண்டர்களில் விற்பனை செய்வதால் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் காத்திருக்க வேண்டிய அவசியம் போன்ற பிரச்சினைகலை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டி டிக்கெட்கள் இன்று பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது.
ஐபிஎல் 2023 பிளேஆஃப் அட்டவணை:
- தகுதிச் சுற்று 1: சேப்பாக்கம், சென்னை, மே 23, செவ்வாய்க்கிழமை - இரவு 7:30 மணி
- எலிமினேட்டர்: சேப்பாக்கம், சென்னை, மே 24, புதன்கிழமை - இரவு 7:30 மணி
- தகுதிச் சுற்று 2: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத், மே 26, வெள்ளிக்கிழமை - இரவு 7:30 மணி
- இறுதிப்போட்டி: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத், மே 28, ஞாயிறு - இரவு 7:30 மணி