துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கடைசியில் களமிறங்கிய தோனி 6 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து வெற்றி பெறவைத்தார். சென்னை அணியின் வெற்றிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தோனியின் இந்த வெற்றியை பாராட்டி தோனியின் சீடரும், இந்திய அணியின் கேப்டனும், ப்ளே ஆப்பில் உள்ள பெங்களூர் அணியின் கேப்டனுமாகிய விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், " கிங் இஸ் பேக்... எப்போதும் மிகச்சிறந்த பினிஷரின் ஆட்டம். என்னை சீட்டின் நுனியில் இருந்து இன்று இரவு மீண்டும் ஒருமுறை துள்ளிக்குதிக்க வைத்து விட்டீர்கள்." இவ்வாறு கோலி பாராட்டியுள்ளார்.





இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஓம் பினிஷாய நமஹ, சென்னைக்கு சிறப்பான வெற்றி. ருதுராஜ் டாப் கிளாஸ், உத்தப்பா கிளாசி, தோனியின் முக்கியத்துவம். சிறந்த வெற்றி. கடந்த சீசன் தோல்வியில் இருந்து மீண்டு வந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்" என்று பாராட்டியுள்ளார்.





நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் 7...அதான்... அதுதான் டுவிட் என்று தோனியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.





நடிகையும் பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னைக்கு ஒரு ஓ போடு என்று பதிவிட்டுள்ளார்.





இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், "ஒரு முறை சிங்கம் என்றால் எப்போதும் சிங்கம்தான்" என்று தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.  


 






சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அல்பி மோர்கல் "தோனி... தோனி.... தோனி.. " என்று பதிவிட்டுள்ளார்.






மேற்கிந்திய தீவு வீரர் இயான் ரபேல் பிஷப் தனது டுவிட்டர் பக்கத்தில், எம்.எஸ்.தோனி மிகச்சிறந்த வீரர். ஒருபோதும் அவருக்கு எதிராக பந்தயம் செய்ய முடியாது. அவர் கூறியது போல இறுதிப்போட்டியில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.






எஸ்.டி. குட்டி என்பவர் ஒரு குழந்தை அழும் புகைப்படத்தை பதிவிட்டு, ஆம்...இட்ஸ் ஆன் எமோஷன் என்று பதிவிட்டுள்ளார்.






இவ்வாறு பலரும் சமூக வலைதளங்களில் தோனியை கொண்டாடி வருகின்றனர்.