கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிய இரண்டு அணிகளை முடிவு செய்வதற்கான ஏலத்தில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ ஆகிய இரண்டு நகரங்களை மையமாக கொண்டு புதிய அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட அணியை சி.வி.சி. கேப்பிடல் நிறுவனமும், லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி. நிறுவனமும் ஏலத்தில் எடுத்தன. 



அகமதபாத் அணி - சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் - 5635 கோடி ரூபாய்



சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் விளையாட்டு துறையில் அறிமுகமாவது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஃபார்முலா ஒன் தொடர் விளையாட்டில் பங்குகளை கொண்டுள்ளது. இப்போது ஐபிஎல் அணியை ஏலம் எடுத்தது. இந்நிலையில், சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் சூதாட்டம் நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ஸ்கை பெட்டிங் அண்ட் கேமிங் எனப்படும் ப்ரிட்டனைச் சேர்ந்த சூதாட்ட நிறுவனத்தின் 80% பங்குகளை சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனால், சி.வி.சி நிறுவனத்தில் பங்குகளை பிசிசிஐ ஆராய உள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியானது. 


 






இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், ஐ.பி.எல். 2022 தொடரில் புதிய அணியை முறைகேடாக வாங்க அகமதாபாத் அணியின் உரிமையாளர் அதானி குழுமம் முயற்சிகள் மேற்கொண்டதாக புகார் எழுந்தது. எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யும் குழுவை நாங்கள் அமைத்துள்ளோம் என்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு இது குறித்த தகவலை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார். 


ஐபிஎல் 2022 மெகா ஏலம் வருகின்ற ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல் பரவி வரும் வேளையில், இது தொடர்பாக பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண