ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ். தோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தோனி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த கிரிக்கெட் பந்தை குட்டி ரசிகைக்கு கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 


சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியஸ் அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னை - மும்பை அணிகள் விளையாடும் போட்டிகள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி நடந்ததோ வான்கடே மைதானத்தில். பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் மைதானத்தின் 200+ ரன்கள் அடித்தாலும் எந்த அணி வெற்றி பெறும் என்பதே விறுவிறுப்பானதாக இருக்கும். அப்படியிருக்க, நேற்றைய போட்டி ரசிகர்களுக்கு திருவிழாவாக இருந்தது என்றே சொல்லலாம். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ தோனி களமிறங்கி விளையாடுவதை காண்பதையே ரசிகர்கள் ரியல் கொண்டாட்டமாக கருதுகின்றனர்.


அப்படியிருக்க, மும்பைக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் தோனி ஹார்ரிக் சிக்ஸர்கள் அடித்தது ரசிகர்களை திக்குமுக்காட செய்துவிட்டது.


இந்தப் போட்டியில் தோனி பல ரெக்கார்ட்களை தன்வசமாக்கியுள்ளார். இந்த சீசனில் இறுதி ஓவரில் 12 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்கள் அடித்து 341.66 ஸ்ரைக் ரேட் வைத்திருக்கிறார். 12 பந்துகளில் 2 பவுண்டரி, 5 பந்துகள் சிக்ஸர்கள். 






சமூக வலைதளம் முழுவதும் தோனியின் ஹாட்ரிக் பற்றி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதோடு, தோனி கிரிக்கெட் பார்க்க வந்த சிறுமிக்கு பந்து பரிசளித்த வீடியோவையும் நெகிழ்ச்சியுடன் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்தியன் ப்ரீயம் லீக் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தோனி போட்டி முடிந்ததும் பெவிலியன் திரும்புகிறார். ஸ்டான்ஸில் கிடக்கும் கிரிக்கெட் பந்தை எடுத்து அங்கிருக்கும் மும்பை அணியின் ரசிகையான சிறுமிக்கு பரிசளிக்கிறார். தோனியின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 


இந்தப் போட்டி ‘தல தோனியின் மேஜிக் ஷோ’ ‘தோனில் களத்தில் இருந்தாலே மைதானம் அதிரும்.’, ‘ எல்லாருக்கும் பிடித்தமானவராக இருப்பவர்.’ ‘ சிறுமி மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பாரே,’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். ஐ.பி.எல். போட்டிகளில் 20-வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து தோனி புதிய ரெக்கார்டை பதிவு செய்துள்ளார். இறுதி ஓவரில் தோனி 64 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 


அதிக சிக்ஸர் அடிக்கும் வீராக பொலார்ட் 33 சிக்ஸர்கள் அடித்துள்ளார். பலரும் எப்போதுமே தோனிதான் ‘தி பெஸ்ட் ஃபினிஷர்’ என்று குறிப்பிட்டு வருகின்றனர். சென்னை - மும்பை போட்டி முடிந்திருந்தாலும் இன்னும் தோனி மேஜிக்கின் ஹேங்கோவரில் இருக்கின்றனர் ரசிகர்கள்.




மேலும் வாசிக்க.


MS Dhoni: கடைசி ஓவரில் எதிரணியை கலங்கச்செய்யும் தோனி.. அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடம்!