இந்தியன் பிரீமியர் லீக்கின் 16-வது சீசனுக்கான செயல்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் 2023 ஏலம் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இதன் மூலம் அணி உரிமையாளர்கள் தங்கள் அணியின் பலவீனங்களை சரி செய்ய தங்களுக்கு தேவையான வீரர்களை எடுப்பார்கள். அதில் பல வீரர்கள் இருப்பார்கள் என்றாலும், உரிமையாளர்களை கவரும் வகையில் ஒரு சில வீரர்கள் உள்ளனர். இவர்களை ஏலத்தில் எடுக்க பல அணிகளின் உரிமையாளர்கள் போரிடுகிறார்கள். அவர்கள் யார் யாரை என்பதை இங்கு பார்க்கலாம்.


பென் ஸ்டோக்ஸ் 


உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் இவர். 31 வயதான அவர் பேட்டிங் பந்து வீச்சு இரண்டிலும் இங்கிலாந்துக்கு மேட்ச் வின்னராக திகழ்கிறார். டி20-இல், அவர் 130.63 ஸ்ட்ரைக் ரேட்டில் 533 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 8.40 என்ற எகனாமி ரேட்டில் 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஸ்டோக்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தால் ஐபிஎல்லிலும் புயலை கிளப்பியிருக்கிறார். 43 ஆட்டங்களில் விளையாடிய அவர் 134.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 920 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில், அவர் 8.56 என்ற எகனாமியில் 28 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பொதுவாக அனைத்து வடிவங்களிலும் மிடில்-ஆர்டரில் இறங்கும் அவர் ஐபிஎல்லில், டாப் ஆர்டரிலும் பேட் செய்யும் திறமையைக் காட்டியுள்ளார். இதுமட்டுமின்றி ஃபீல்டிங்கில் பல அசாத்தியமான கேட்சுகளை பிடித்துள்ளார்.


ஸ்டோக்ஸ் தனது ஆல் ரவுண்ட் திறமையால் தான் சார்ந்திருக்கும் அணிக்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்குவதால் அவருக்குதான் இருக்கும் வீரர்களிலேயே வரும் ஏலத்தில் அதிக மவுசு இருக்கும். பல கோடிகளுக்கு ஏலம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.



சாம் கரன்


குறுகிய வடிவ போட்டிகளில் தனது செயல்திறனை நிரூபித்துள்ள சாம் கரன், 144 டி20 போட்டிகளில் விளையாடி 8.48 என்ற எகனாமியில் 146 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங் மூலம், அவர் 135.65 ஸ்ட்ரைக் ரேட்டில் 1731 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக ஆல்-ரவுண்டராக இருந்தவர் இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 7.28 எகனாமியில் பந்து வீசி தொடர் நாயகன் விருதையும் வென்றார். வேகத்தை மாற்றி வீசுவதிலும், கடைசி ஓவர்களில் துல்லியமாக யார்கர் வீசுவதிலும் வல்லமை பெட்ரா அவர் அணிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறார். அதுமட்டுமின்றி ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பந்து வீசும் திறனை வெளிப்படுத்துகிறார். பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் இவர் இரு பக்கமும் அணிக்கும் உதவும் முக்கியமான வீரராக உள்ளார் என்பதால் ஏலத்தில் அவருக்காக அணிகள் பல கோடிகளை செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்: Body Shaming : உருவத்தை வெச்சு கேலியா?! பள்ளிகளில் தொடங்க இருக்கும் புதிய விழிப்புணர்வு பாடம்.. அரசு அறிவிப்பு..


கேமரூன் கிரீன்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்களில் மிகவும் நல்ல ரெக்கார்ட்ஸ் வைத்துள்ள இந்த இளம் வீரர், 2020 ஆம் ஆண்டில் விளையாட துவங்கிய அவர், டெஸ்ட் போட்டிகளில் முதலில் அறிமுகம் ஆனார். தாமதமாகதான் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாட துவங்கினார். ஒருநாள் போட்டிகளில், அவர் 12 ஆட்டங்களில் 92.15 ஸ்ட்ரைக் ரேட்டில் 270 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 4.98 என்ற எகனாமியில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில், ​​கிரீன் இந்த ஆண்டுதான் அறிமுகம் ஆனார். அதிரடியாக ஆடும் அவர் எட்டு ஆட்டங்களில் 173.75 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 139 ரன்கள் எடுத்துள்ளார். ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவருக்கென ஒரு நிலையான இடமெல்லாம் தேவை இல்லை ஒன்று முதல் ஏழு வரை எல்லா இடங்களிலும் பேட் செய்து அணிகளுக்கு பேட்டிங் வரிசையை எளிதாக்குகிறார். நான்கு ஓவர் முழுமையாக வீசும் அளவு திறன் கொண்டதால் ஐந்தாவது பந்து வீச்சாளராகவும் பயன்படுத்தலாம்.



ரெய்லி ரோசோவ்


ரெய்லி ரோசோவ் டி20 சுற்றுகளில் ஒரு மாபெரும் வீரராக இருந்துள்ளார். 33 வயதான அதிரடி ஆட்டக்காரர் உலகெங்கிலும் உள்ள டி20 போட்டிகளில் தனது பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் டி20யில் 269 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மற்றும் 143.44 ஸ்ட்ரைக் ரேட்டில் 6874 ரன்கள் குவித்துள்ளார். வேகமாக வளர்ந்து வரும் டி20 வடிவத்தில், ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவது காலத்தின் தேவையாகிவிட்டது, ரோசோவ் அந்த அணுகுமுறையை உள்ளடக்கிய ஒருவர். அவரால் தொடக்கத்தில் இருந்தே எதிரணிக்கு தாக்குதலை எடுத்துச் செல்லவும், சில பந்துகளில் போட்டியின் போக்கை மாற்றவும் முடியும். எனவே, பல ஐபிஎல் உரிமையாளர்கள் அவரை தங்கள் அணியில் இணைக்க முயன்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


ஜோஷ்வா லிட்டில்


ஜோஷ்வா லிட்டில் தனது அபாரமான பந்துவீச்சால் டி20 உலகக்கோப்பையில் பல அணிகளை திணரடித்தார். அவர் இந்த காலண்டர் ஆண்டில் 26 T20I போட்டிகளில் விளையாடி 7.58 என்ற எகனாமியில் 39 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2022ல் தனது திறமையை நிரூபித்த லிட்டில், 7.42 என்ற எகனாமியில் வெறும் ஐந்து ஆட்டங்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் முக்கியமாக திகழும் இந்த விக்கெட் டேக்கரை தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள உரிமையாளர்கள் விரும்பலாம். பொதுவாக இங்கிலாந்து அணி அயர்லாந்தில் நல்ல வீரர்களை கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளும். இங்கிலாந்து எடுக்கத்தவறிய இந்த ரேர் பீஸை ஐபிஎல் அணிகள் தட்டி தூக்க திட்டமிடும் என்று தெரிகிறது.