2021 ஐபிஎல் சீசன் நடந்து முடிந்ததை அடுத்து, 2022 ஐபிஎல் சீசனுக்கான ஆயுத்த பணிகள் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக முன்னரே அறிவிப்புகள் வெளியானது. அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு முதல் 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இரண்டு புதிய அணிகளுக்கான ஏலத்தில் முக்கியமான நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பிரபமலமான கால்பந்து அமைப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணி உரிமையாளர்கள் ஐபிஎல் அணியை உரிமையாக்கி கொள்ள திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஷாரூக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ப்ரீத்து ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் என பாலிவுட்டுக்கும் ஐபிஎல் தொடருக்கும் கனெக்ஷன் இருக்கின்றது. அந்த வரிசையில், தீபிகா - ரன்வீர் ஜோடி புதிய அணியை வாங்க திட்டமிட்டுள்ளது கவனிக்க வைத்துள்ளது. முன்னாள் பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான தீபிகா, கால்பந்து ரசிகரான ரன்வீர் கிரிக்கெட்டிலும் எண்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டனர்.
பிசிசிஐ விதிமுறைகள் என்ன?
சராசரியாக 3000 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஒருவரோ அல்லது நிகர சொத்து மதிப்பு 2,500 கொடியோ உள்ளவர்கள் மட்டுமே அணியை வாங்க டெண்டர் கொடுக்க முடியும். டெண்டர் எடுக்க தகுதி பெரும் சராசரி சம்பாத்யமான 3000 கோடியிலிருந்து பிசிசிஐ இந்தமுறை கொஞ்சம் குறைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இதில் டெண்டர் எடுக்க உரிமைகள் உண்டு, ஆனால் டெண்டரில் வென்று அணியை வாங்கினால், இந்தியாவில் ஒரு நிறுவனம் தொடங்கிய பிறகே அணியை உரிமை கொள்ள முடியும்.
இது போன்ற சில விதிமுறைகள் உள்ளதால், ஐபிஎல் அணியை வாங்க திட்டமிடும் மான்செஸ்டர் யுனைடெட் அணி, இந்தியாவைச் சேர்ந்த பிரபலம் / இந்திய நிறுவனங்களளோடு கூட்டு சேர்ந்து அணியை ஏலம் எடுக்கும் என தெரிகிறது. அதனாலையே, தீபிகா - ரன்வீர் ஜோடியோடு மான்செஸ்டர் யுனைட்டெட் அணி பார்டனர்ஷிப் அமைத்து புதியதொரு ஐபிஎல் அணியை வாங்க திட்டமிட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தவிர அணிகள் வாங்க டெண்டர் கொடுத்துள்ள வேறு நிறுவனங்கள் என்னவென்று பார்த்தால், அதானி க்ரூப், டொரெண்ட் ஃபார்மா, ஆரோபிண்டோ ஃபார்மா, ஆர்பி-சஞ்சீவ் கோயன்கா க்ரூப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, ஜிண்டால் ஸ்டீல்ஸ், ரோணி ஸ்க்ரூவலா மற்றும் மூன்று தனியார் பங்கு நிறுவனங்களும் டெண்டர் அளித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்