தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் விவேக்கும் ஒருவர். சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டது மட்டுமின்றி அதுகுறித்தான விழிப்புணர்வையும் அவர் மக்களிடையே ஏற்படுத்தினார்.


ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் (ஏப்ரல் 17) அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரசிகர்களிடையேயும், கலைத்துறையினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதேசமயம், தடுப்பூசி செலுத்திய இரண்டே நாள்களில் விவேக் உயிரிழந்ததால் தடுப்பூசி செலுத்தியதால்தான் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது. அந்தத் தகவல் தமிழ்நாட்டில் கடும் அதிர்ச்சியையும் உருவாக்கியது.


இதுபோன்று பரவும் தகவல்களால் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் பரவும். அதனால் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தமிழ்நாடு சுகாதாரத் துறை மறுத்துவந்தது.


இதனையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். அதில், விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தியபோது விதிகள் பின்பற்றப்படவில்லை, அவரது மரணம் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.


அந்தப் புகாரை கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்தி 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டது.


அதன்படி கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு குறித்து தேசிய குழு ஆராய்ந்து அறிக்கையை தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையில், விவேக் இறப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுதான் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: சேதமடைந்து காணப்படும் பிரஞ்சுக்காரர்கள் கட்டிய செல்லிப்பட்டு அணை - மழைநீர் கடலில் கலப்பதால் வேதனை


34 Years of Nayakan: நாயகர்கள் வரலாம் போகலாம் இந்த ‘நாயகன்’ இந்தியாவின் நிரந்தரம்! அமெரிக்காவின் டாப் பட்டியலில் இடம்!


நீட் தேர்வு எழுதினாலும் பிரச்சினை தானா...? எழுதியது 177 வினா... வந்தது வெறும் 5! கதறும் காஞ்சி மாணவர்!