CSK vs MI Match Prediction: 2021-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ஜாம்பவான் அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் வலம் வருகின்றன. இதனால், இந்த இரு அணிகளும் எப்போது மோதிக் கொண்டாலும் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படும். இந்த இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல். தொடரில் மோதிக் கொண்ட போட்டிகளின் முழு விவரத்தை கீழே காணலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.





இவற்றில் மும்பை அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 219 ரன்கள் குவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 218 ரன்கள் குவித்துள்ளது. குறைந்தபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 79 ரன்களை எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 141 ரன்களை எடுத்துள்ளது.


போட்டி நடைபெற உள்ள துபாய் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்னதாக, ஒரு போட்டியில் ஆடியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. கடைசியாக இரு அணிகளும் ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தாண்டு நடைபெற்ற முதல் பாதி தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 219 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.




மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தனிநபர் அதிகபட்சமாக சனத் ஜெயசூர்யா 114 ரன்கள் குவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் தனிநபர் அதிகபட்சமாக மைக்கேல் ஹஸ்ஸி 86 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை அணியின் சார்பில் தனிநபர் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 




இதுவரை இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி சார்பில் சுரேஷ் ரெய்னா அதிக ரன்களை குவித்துள்ளார். அவர் 732 ரன்களை எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 693 ரன்களை குவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ட்வெய்ன் ப்ராவோ அதிகபட்சமாக மும்பை அணிக்கு எதிராக 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சென்னை அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கா 37 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




பலம் மிகுந்த அணியாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பும்ரா, பொல்லார்ட், குயின்டின் டி காக், சூர்யகுமார் யாதவ், ட்ரென்ட் போல்ட் என்று வலுவான வீரர்கள் உள்ளனர். தோனி தலைமையிலான சென்னை அணியிலும் அம்பத்தி ராயுடு, ப்ராவோ, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, சாம்கரண், ஷர்துல் தாக்கூர், பாப் டு ப்ளிசிஸ், உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட் என சமபலம் கொண்ட வீரர்கள் உள்ளனர்.