ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. ரசிகர்கள் இன்றி பாதுகாப்பான பயோ பபிள் சூழலில் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், பூட்டிய மைதானத்திற்கு உள்ளேயும் கொரோன நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதே போட்டிகள் நிறுத்தப்பட காரணமாக அமைந்தது. இதனால், இந்தியாவில் நடைபெற இருந்த மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். இங்கு பயிற்சி மேற்கொண்ட பிறகு ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அணி வீரர்கள், போட்டி தொடங்குவதற்கு முன்பு அங்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.
முன்னதாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘செப்டம்பர் 19 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது. தகுதி 1 மற்றும் 2 அக்டோபர் 10 மற்றும் 13 ஆம் தேதிகளிலும், எலிமினேட்டர் அக்டோபர் 11 ஆம் தேதியிலும் நடைபெறுகிறது. மீதமுள்ள விளையாட்டுகளின் முழு அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.