பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களின் மனைவியும், நடிகர் சிம்புவின் அம்மாவுமான உஷா ராஜேந்தர் அவர்கள் தனது வீட்டு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட உடும்பை வன விலங்கு அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். வீட்டு தோட்டத்தில் பதுங்கி இருந்த உடும்பு, கர்ப்பமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மதுரவாயிலில் உள்ள டி.ஆர் கார்டனில் கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது, உடும்பு ஒன்று பதுங்கியிருப்பதை பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து, உஷா ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடும்பு கர்ப்பமாக இருப்பதை பார்த்த உஷா, மதுரவாயில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளார். மேலும், வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், டி.ஆர் கார்டன் விரைந்த அதிகாரிகள், உடும்பை மீட்டு எடுத்து சென்றனர். உடனடியாக தகவல் தெரிவித்தற்காக உஷா ராஜேந்திரனுக்கு வன விலங்கு அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


Marburg Virus | மறுபடி முதல்ல இருந்தா? மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் 'மார்பர்க் வைரஸ்' தாக்கம்: எச்சரிக்கும் உலக சுகாதார மையம்..!


சில காலங்கள் சினிமா வாய்ப்புகள் பெரிதும் இல்லாமல் இருந்த சிம்பு, உடல் எடையை குறைத்து “ ஈஸ்வரன்” படம் மூலம்  கம் பேக் கொடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை சிம்புவிற்கு கொடுக்கவில்லை என்றாலும் அந்த படத்திற்கான சிம்புவின் மெனக்கெடல்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் வெங்கட் பிரபுவுடன் சிம்பு இணைந்திருக்கும் அடுத்த படமான ‘மாநாடு’ மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளது. மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ் புரடக்‌ஷன் வேலைகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது.






இந்நிலையில் சிம்பு சமீபத்தில் தனது ட்விட்டர்  போன்ற சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலானது. சிவனை வழிப்பட்டு கொண்டிருக்கும்போது அவரின் நண்பர்கள் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்.  அதனை பதிவிட்டு சிம்பு “ நன்றி இறைவா !” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்டதாம். இதற்கு #OmNamahShivaya #Atman #SilambarasanTR என்ற ஹேஷ்டேகுகளை சிம்பு கொடுத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 6 வருடங்களுக்கு முன்னர் இதே கோவிலில் சிம்பு தரிசனம் செய்த புகைப்படங்களை ஒப்பிட்டு அவரின் மாற்றங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.