கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் இன்னும் 31 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பாதுகாப்பான முறையில் போட்டிகளை நடத்தி முடிக்கும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ. 


அதன் ஒரு பகுதியாக, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணி வீரர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு 31,000 ஆர்டி பிசிஆர் பரிசோதனை கருவிகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், சிகிச்சைக்கு தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ளவும் அனைத்து முன்னேச்சரிக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ உறுதி அளித்துள்ளது. நிபுணத்துவம் நிறைந்த மருத்துவ குழுக்கள் ஆகியவற்றை வீரர்கள் தங்கியிருக்கும் பதிகளில் பயோ-பபிள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தங்க வைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.






ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. ரசிகர்கள் இன்றி பாதுகாப்பான பயோ பபிள் சூழலில் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், பூட்டிய மைதானத்திற்கு உள்ளேயும் கொரோன நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதே போட்டிகள் நிறுத்தப்பட காரணமாக அமைந்தது. இதனால், இந்தியாவில் நடைபெற இருந்த மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது. செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க உள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள்: 






முதல் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு, சென்னை வந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சில நாட்கள் தங்கியிருந்த பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீரர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது உள்ளதால், முன்னரே சென்னை அணி வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.


செப்டம்பர் 19 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்


செப்டம்பர் 24 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ச் பெங்களூர்


செப்டம்பர் 26 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


செப்டம்பர் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்


அக்டோபர் 2 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்


அக்டோபர் 4 - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்


அக்டோபர் 7 - சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்