சூர்யா தேவி செருப்பால் அடித்ததிலிருந்து டிக்டாக் முன்னாள் பிரபலம் சிக்கந்தர் என்ற சிக்கா மீது பலருக்கு அனுதாபம். சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுத்தால் தான் விடுவேன் என விடாப்பிடியாக இருந்து, சபதத்தின் மீசையை எடுத்து, தற்போது மீசை இழந்து சோகத்தில் இருந்த சிக்காவிற்கு, சூர்யா தேவி வீட்டில் ஏற்பட்ட பிரச்னையும், அதனால் அவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, போலீசார் அவரது வீட்டை உடைத்து அவரை மீட்டது, இனி சமூக வலைதளத்தில் வரமாட்டேன் என உறுதிமொழி எடுத்து சூர்யா தேவி ஒதுங்கிக் கொண்டது வரை எல்லாமே அவருக்கு மகிழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. 




இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சக போட்டியாளரான ஜி.பி.முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறப்போகிறார் என்கிற செய்தி தான் சிக்காவை கொலையாய் கொன்று கொண்டிருக்கிறது. இன்னும் அந்த செய்தி உறுதிபடுத்தப்படாத நிலையில், அதையே சிக்காவால் ஜீரணிக்கமுடிக்கவில்லை. இனி தானும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறும் வகையில் தன்னை மாற்றிக் கொள்ளப் போவதாகவும், அடுத்த ஆண்டு பிக்பாஸ் 6ல் இடம் பிடிக்கப் போவதை லட்சியமாக வைத்து செயல்படப் போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிக்கா. இதோ சிக்கா பேசிய வீடியோவின் செய்தி தொகுப்பு...


‛‛இனி ஆல்பர்ட் பெர்னாண்டோ வழியில் தான் பயணிக்கப் போகிறேன். உனக்கான பாதையில் பயணம் செய்தால் உனக்கான வெற்றியை பெறலாம் என்கிற ஆல்பர்ட் பெர்னாண்டோவின் வார்த்தைப்படி வாழப் போகிறேன். இனி யார் வழியிலும் குறுக்கிட மாட்டேன். எனது அடுத்த இலக்கு... பிக்பாஸ் தான். இனி என் வழி தனி வழி... சிங்கப்பாதை கிடையாது... சிறுத்தை பாதை...! அதிலும் பெருத்த பாதை! என் வழி தனி வழி முடிந்தால் என்னை பாலோ பண்ணுங்க. எல்லாரையும் திட்டி திட்டி நெஞ்சு வலிக்குது. இனிமே இதெல்லாம் வேணாம், இளைஞர்கள் வழி தான் இனி என் வழி. இளைஞர்களுக்கு பிடித்த தனுஷ், அஜித், விஜய், பாடல்கள், மிமிக்ரி தான் இனி செய்வேன். அண்ணேன் இனி கெட்ட வார்த்தை பேசப்போறது இல்லை. யாரை பற்றியும் இனி புறம்  பேசப்போவதில்லை. 1990ல் இருந்த சிக்கா இனி வருவான். டிக்டாக் வருவதற்கு முன் இருந்த சிக்கா, இனி வருவான். நிறைய டிபரெண்ட் இருக்கும்; புது சிக்காவை இனி பார்ப்பீங்க. ஒரே கலகலப்பு, கிளுகிளுப்பு தான். சுக்கு மல்லி காபி, அதிமதுரம், திப்பிலி குடித்து வாய்ஸ் ரெடி பண்ணிட்டேன். இனி ஒரே சாங்ஸ் தான். எஸ்.பி.பி, கண்ணதாசன், வைரமுத்து, ஜேசுதாஸ் பாடல்கள் தான். இனியாவத வாழ்க்கையில் முன்னேற்ற வழியை பார்ப்போம். இனி நோ சூர்யா தேவி.. நோ சாதனா... நோ... நோ...யாரை பற்றியும் பேசப்போறதில்லை. இனி நல்ல வீடியோ போட்டா தான் விஜய் டிவி என்னை கூர்ந்து நோக்கும். அப்போ தான் அடுத்த வருசம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிடுவாங்க. இனி அது மட்டும் தான் டார்க்கெட், என பேசியுள்ளார்.


சிக்கா பேசிய வீடியோவின் முழு வீடியோ...!