கனடாவின் சாகுனேயில் நடந்த W60 ITF மகளிர் இறுதிப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீராங்கனை கர்மன் கவுர் தண்டி, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் கேத்தரின் செபோவை தோற்கடித்தார். இந்த வெற்றியின்மூலம், கர்மன் கவுர் தண்டி சர்வதேச அளவில் 217 வது இடத்தையும், இந்தியளவில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளார்.


இதன்மூலம் 24 வயதான கர்மன் கவுர் தண்டி, முதல் 200 இடங்களுக்குள் நுழைந்த ஆறாவது இந்திய பெண் டென்னிஸ் வீராங்கனை ஆனார். தண்டிக்கு முன், நிருபமா சஞ்சீவ், சானியா மிர்சா, ஷிகா உபெராய், சுனிதா ராவ் மற்றும் அங்கிதா ரெய்னா ஆகியோர் இந்த சாதனையை எட்டியுள்ளனர். 




கர்மன் கவுர் தண்டி, பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 91 இடங்கள் முன்னேறி 217 வது இடத்திற்கு முன்னேறினார். முன்னதாக இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக இருந்த அங்கிதா ரெய்னா, பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 13 இடங்கள் கீழே சரிந்து 297வது இடத்திற்கு சென்றார். ருதுஜா போசலே ஒன்பது இடங்களை இழந்து உலகின் 411-வது இடத்தைப் பிடித்தார். ரியா பாட்டியா 5 இடங்களை இழந்து 490-வது இடத்தில் உள்ளார். சஹாஜா யமலாபல்லி 20 இடங்கள் முன்னேறி 508-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் அனைவரும் இந்திய மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் 5 இடத்தில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 






யார் இந்த கர்மன் கவுர் தண்டி..? 


கர்மன் கவுர் தண்டி ஒரு இந்திய தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை ஆவார், இவர் ஜூன் 16, 1998 அன்று புது தில்லியில் பிறந்தார். அவர் தனது எட்டு வயதிலேயே டென்னிஸ் விளையாட்டை விளையாடத் தொடங்கினார். மேலும் மகேஷ் பூபதி மற்றும் விராட் கோலி அறக்கட்டளையின் உதவியால் தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கைக்குள் நுழைந்தார். 


சாகுனேயில் பெற்ற வெற்றி கர்மன் கவுர் தண்டியின் மூன்றாவது கேரியர் ஒற்றையர் மும் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். ஜூன் மாதம் குருகிராமில் நடந்த W25 போட்டியில் வெற்றி பெற்றார். 






முன்னதாக, கர்மன் கவுர் தண்டி முதல் சுற்றில் அமெரிக்காவின் ராபின் ஆண்டர்சனையும், 2022-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு பாதியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பானின் எனா ஷிபஹாராவையும் வீழ்த்தினார்.


பின்னர் அவர் கால் இறுதி மற்றும் அரையிறுதியில் முறையே இங்கிலாந்தின் சாரா பெத் கிரே மற்றும் அமெரிக்காவின் சாரா பெத் கிரே ஆகியோரை நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.