இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதனிடையே, புதிய வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கை சென்று தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற உள்ளது.
ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை : டாப் 10 இடங்களை பிடித்த விராட், ரோஹித், பந்த்!
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாததால் புதிய கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி அணியில் இடம்பிடித்துள்ளார். இரண்டு வாய்ப்பு பெற்ற அவர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் விவரம்:
ஷிகர் தவான் (கேப்டன்)
புவனேஷ்வர் குமார் (துணைக் கேப்டன்)
பிரித்வி ஷா
தேவ்தத் படிக்கல்
ருதுராஜ் கெய்க்வாட்
சூர்யகுமார் யாதவ்
மணிஷ் பாண்டே
நிதிஷ் ராணா
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
சாஹல்
ராகுல் சாஹர்
கே. கவுதம்
குருணால் பாண்ட்யா
குல்தீப் யாதவ்
வருண் சக்ரவர்த்தி
தீபக் சாஹர்
நவ்தீப் சைனி
சேத்தன் சக்காரியா.
நெட் பவுலர்கள்: இஷான் பெரேல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்ற அணியிலிருந்து இந்த அணி முற்றிலும் மாறுபட்டது. இந்த தொடரின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்தத் தொடரில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் மற்றும் தீபக் சாஹர், சேத்தன் சகாரியா ஆகியோர் அணியின் புதிய முகங்கள் ஆவார்கள். இளம் அணி தங்கள் திறனைக் காட்டவும், இந்திய அணியை பெறச்செய்யவும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.