ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முன்னதா இந்த சீசனின் ப்ளேஆப் தகுதிச் சுற்றில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. அந்தவகையில் மீதி இருக்கும் 8 அணிகள் ப்ளேஆப் சுற்றுக்கு உள்ளே போக போராட உள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 59 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் பேட்டிங்கை தொடங்கினார்கள்.
சுப்மன் கில் - சாய் சுதர்சன் சதம்:
இவர்களது ஜோடி அதிரடி சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்றைய போட்டியில் அதிரடியா விளையாடிய சாய் சுதர்சன் அதிவேகமாக 1000 ரன்களை ஐபிஎல் சீசனில் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மறுபுறம் வெறும் 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் சுப்மன் கில். அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனும் அதிரடியான சதத்தை பதிவு செய்தார். சாய் சுதர்சனும் 50 பந்துகளில் தான் சதம் விளாசினார்.
இந்த சூழலில் பார்ட்னர்ஷிப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக அதிக ரன்கள் எடுத்த சாதனை செய்த கே.எல்.ராகுல் - குயிண்டன் டிகாக் சாதனையை இந்த ஜோடி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 ரன் வித்தியாசத்தில் அந்த சாதனையை தவறவிட்டனர். அதன்படி மொத்தம் 210 ரன்களை எடுத்தது இவர்களது பார்ட்னர்ஷிப். மொத்தம் 51 பந்துகள் களத்தில் நின்ற சாய் சுதர்சன் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 103 ரன்களை குவித்தார். இதனிடையே சுப்மன் கில்லும் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 55 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 104 ரன்களை குவித்தார்.
232 ரன்கள் இலக்கு:
பின்னர் டேவிட் மில்லர் மற்றும் ஷாருக்கான் களம் இறங்கினார்கள். இதில் டேவிட் மில்லர் 16 ரன்களும், ஷாருக்கான் 2 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 231 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது.