இந்திய ஆண்கள் ஹாக்கி டிஃபென்டர் நிலம் சஞ்சீப்  நடக்கவிருக்கும், ஹாக்கி உலகக் கோப்பை 2023-ல் அறிமுகமாக உள்ளார், இந்த வளர்ந்து வரும் நட்சத்திரத்தை நாடே  கொண்டாடும் போது, ​​அவரது குடும்பம் வறுமையின் கதைகளுடன் ஒரு குடிசை வீட்டில் வாழ்கிறது.


இந்த உலககோப்பை தொடரின் டி பிரிவில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயினுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது. இன்று (13/01/2023) ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி மைதானத்தில் இந்திய அணி ஸ்பெயினுக்கு எதிராக தனது முதல்  ஆட்டத்தினை ஆடவுள்ளது. 


ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கடோபஹல் கிராமத்தில் எரிவாயு மற்றும் தண்ணீர் இணைப்பு இல்லாத 'குடிசை' வீட்டில் வசித்து வருகிறார் சஞ்சீப்.   


இந்த உலககோப்பையில் இந்திய அணிக்காக களமிறங்கி, தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடவுள்ள சஞ்சீப்பின்  குடும்பம் தனது வாழ்க்கையைச் சமாளிக்க போராடுகிறது, மேலும் சஞ்சீப் ஒரு சர்வதேச போட்டிகளுக்காக பயிற்சி பெறுவது கூடுதல் சவாலாக உள்ளது. சஞ்சீப்பின் தந்தை பிபின்  தனது மகனின் விளையாட்டினால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். ”சஞ்சீப் உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். ஓலை வீட்டில் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.


மேலும் அவர், "எங்கள் மகன் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார் என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரது குழந்தைப் பருவத்தில், சஞ்சீப் தனது மூத்த சகோதரர் மற்றும் நண்பர்களுடன் மூங்கில் குச்சிகள் மற்றும் கிழிந்த துணிகளில் செய்யப்பட்ட பந்துகளைப் பயன்படுத்தி ஹாக்கி பயிற்சி செய்தார்," என்றும்  பிபின்  ANI இடம் கூறினார்.


”எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. குடிசை வீட்டில் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் மகன் சர்வதேச போட்டிகள் முடிந்த பின்னர்  வீட்டிற்கு வரும்போது, ​​அவனும் இந்தக் குடிசை வீட்டில்தான் இருப்பான். அரசு எங்களுக்கு உதவி செய்தால் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனவும் சஞ்சீப்பின் தந்தை மேலும் கூறினார்.


மின்சாரம் இல்லாத ஒரு கிராமத்தில் வளர்ந்து, தனது பெற்றோருக்கு விவசாயத்தில் உதவி செய்வதில் ஈடுபட்டிருந்த சஞ்சீப்புக்கு ஹாக்கியில்   அவரது கவனம் திரும்பியது.  இப்போது பல வருட கடின உழைப்புக்குப் பிறகு, பிர்சா முண்டா ஸ்டேடியத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஸ்பாட்லைட்கள் சஞ்சீப் மீது பிரகாசிக்கின்றன.






2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஒடிசா ஜூனியர் தேசிய கோப்பையை வெல்ல உதவிய பிறகு, அவர் தொடர்ந்து தரவரிசையில் உயர்ந்தார். அந்த ஆண்டு சீனியர் நேஷனல்ஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஒடிசா சீனியர் அணியில் அவர் தனக்கான இடத்தினை உறுதி செய்தார். அதன் பின்னர், 


அவர் தனது சர்வதேச போட்டிகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கவில்லை, அவர் உடனடியாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அப்போது 17 வயதான நிலம் சஞ்சீப், 2016 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்து, வங்கதேசத்தில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைப் பதக்கத்துக்கு நாட்டை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மிகவும் ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வந்து தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலம் சஞ்சீப் போன்ற போராட்ட குணம் நிறைந்த வீரர்களும் இளைஞர்களும் தான் இந்த தேசத்தின் நம்பிக்கையாக இருக்கின்றனர்,