பொங்கல் பண்டிகையொட்டி தருமபுரி பூக்கள் சந்தையில் மல்லிகை பூ கிலோ 1200, சன்னமல்லி, கனகாம்பரம் 1000 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூக்களை விற்பனை செய்வது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஏராளமான விவசாயிகள் விளைவித்த பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனால் பூக்கள் விலை உயர்ந்தது. இனாறைய சந்தையில் மல்லிப்பூ விலை கிலோ 1200 ரூபாய்க்கும், காக்கடா, சன்ன மல்லி, கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் சாமந்தி ரூ.160, சம்பங்கி, செண்டு மல்லி பூ கிலோ 100 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ 220 ரூபாய்க்கும், கோழிகொண்டை கிலோ அறுபது ரூபாய் என விலை பூக்கள் விலை அதிகரித்து விற்பனையானது. இந்த விலை உயா்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இரண்டு தினங்கள் உள்ளதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சில மாதங்களாக, பூக்கள் விலை இல்லாமல் தவித்து வந்த விவசாயிகள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழர் திருநாளான சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற வகையில் அரசு அலுவலகங்கள் மற்றும் திமுகவினர் சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தருமபுரியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து, இஸ்லாமியர், கிருஸ்த்துவ மத போதகர்கள் முன்னிலையில் மகளிர் அணியினர் அழகிய வண்ண கோலமிட்டு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் புதுப்பானை வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடபட்டது. அப்போது பொங்கலோ பொங்கல் என ஒருமித்த குரலில் கோ~மிட்டு பொங்கலை கோலாகளமாக கொண்டாடினர். கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கபட்டது. பொங்கலில் கலந்து கொண்ட மத போதகர் மற்றும் இஸ்லாமிய உள்ளிட்டவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் திமுகவைச் சார்ந்த மாவட்ட ஒன்றிய நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.