உலகக்கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா, அபிஷேக் இணை தங்கப்பதக்கத்தையும், ஒற்றையர் பிரிவில் ஜோதி சுரேகா வெள்ளிப்பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர்.


தங்கம் வென்ற இந்திய இணை:


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலகக்கோப்பை வில்வித்தை 3ம் நிலை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் இறுதிப்போட்டியில், இரட்டையர் கலப்புப் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா மற்றும் அபிஷேக் இணை ஃப்ரான்ஸ்இன் ஜேன் பவுல்ச் மற்றும் 48 வயதான ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் சோபி டோட்மோட்டை எதிர்கொண்டது. இந்த இணை வில்வித்தை போட்டியின் வெற்றிகரமான இணையாகக் கருதப்படுகிறது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் போட்டியில் ஜோதி மற்றும் அபிஷேக் இணை 152 க்கு 149 என்ற புள்ளி கணக்கில் ஃப்ரான்ஸ் இணையை தோற்கடித்தது.






வெள்ளி வென்ற ஜோதி சுரேகா:


அதே போல ஒற்றையர் போட்டியில் இங்கிலாந்தின் எல்லா கிப்ஸனை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இருவருமே 148 என்ற சமமான புள்ளிகளை எடுத்தனர். எல்லா கிப்ஸ்ன் எய்த அம்பு நடுப்புள்ளிக்கு சற்று நெருக்கமாக இருந்ததால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் எல்லா கிப்ஸனுக்கு தங்கப்பதக்கமும், உலகின் நம்பர் 3 வீராங்கனையான ஜோதிக்கு வெண்கலப்பதக்கமும் கிடைத்தது. இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் ஜோதிக்கு இது இரண்டாவது பதக்கமாகும். 






சீனாவை எதிர்கொள்ளும் இந்தியா:


நாளை நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி மற்றும் அன்கிதா பகத் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் சீனாவின் தைய்பேயை எதிர்கொள்கின்றனர்.


முன்னதாக கடந்த மே மாதம் ஈராக்கின் சுலைமானியாவில் நடைபெற்ற ஆசியக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஜூனிய வில்வித்தை அணி 8 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 14 பதக்கங்களுடன் தரவரிசையில் முதலிடம்பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.