கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இன்று,1,382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 617 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 607 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை சார்பாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே நேற்று 1,359 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட  நிலையில் தற்போது 1,382 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்களிடையே இயல்பு வாழ்க்கை பாதிப்படையுமா என  அச்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 


இன்றைக்கு கோவை மாவட்டத்தில் முக  கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாட்டில் இன்றைய பாதிப்பு குறித்து சுகாதரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 






 


மாவட்ட வாரியான பாதிப்பு குறித்த தகவலில் சென்னையில் மட்டும் 607 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 









ஏற்கனவே தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில், 617 பேர் குணமாகி வீடு திரும்புகின்றனர்.