ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே ஜிம்பாப்வே அணி எடுத்துள்ளது.


மிரட்டலாக வெற்றி பெற்ற இந்திய அணி: இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1க்கு என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது கில் தலைமையிலான இந்திய அணி. ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.


இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் பவுல்ட் ஆகி வெளியேறினார். 14 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மாவும் 13 ரன்கள் எடுத்த கேப்டன் கில்லும் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள்.


இதையடுத்து, ரியான் பராக்குடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தபோது ரியான் பராக் ஆட்டம் இழந்த போதிலும், அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.


தொடரில் ஆதிக்கம் செலுத்திய தமிழக வீரர்: 58 ரன்கள் எடுத்திருந்தபோது சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்தார். இறுதியில், ஷிவம் துபே சிக்சர்களை பறக்கவிட இந்திய அணி 167 ரன்களை எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் தொடக்கம் முதலே சொதப்பினர். வெஸ்லி மாதவெரே, டக் அவுட் ஆகி வெளியேறினார்.


தடிவானாஷே மருமாணி, 27 ரன்களிலும் டியான் மியர்ஸ், 34 ரன்களிலும் அவட் ஆகி வெளியேறினர். மற்ற வீரர்கள், சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில், 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே ஜிம்பாப்வே அணி எடுத்தது.


இதன் மூலம், 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றி பெற்றது. சிறப்பாக பேட்டிங் செய்து, பந்து வீசிய ஷிவம் துபே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிவிக்கப்பட்டார்.