நாளை மறுநாள் வெளியாகும் ராயன் பட ட்ரெயிலர்


தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தனுஷ். இவர் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ராயன். வரும் 26ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் நாளை மறுநாள் வெளியாகிறது.


இந்தியன் 2 படத்தில் 20 நிமிட காட்சிகள் குறைப்பு


தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான இயக்குனராக கருதப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகி 1996ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2ம் படம் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த படத்தின் நீளம், திரைக்கதைக்காக படம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியன் படத்தில் 20 நிமிடங்கள் காட்சிகள் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் படத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்கலாம் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.


ரூபாய் 80 கோடி வசூலை குவித்த இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2ம் பாகம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தியன் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு வெளியாகியது. இதையடுத்து, படம் வெளியானது முதலே ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து வருகின்றனர். தற்போது வரை படம் ரூபாய் 80 கோடி வசூலை குவித்துள்ளது.


வரவேற்பை போல விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் – பார்த்திபன்


தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனரும், நடிகருமானவர் பார்த்திபன். பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் டீன்ஸ். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவரிடம் இந்தியன் 2 படத்தின் மீதான விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு படத்தின் வரவேற்பை போலவே விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஓடிடி-யில் வெளியாகும் ஆடுஜீவிதம்


இந்திய திரையுலகில் மலையாள திரையுலகிற்கு என்று தனி இடம் உண்டு. தரமான திரைக்கதைகளே அதற்கு காரணம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது ஆடுஜீவிதம் திரைப்படம். பிரித்விராஜ் தன்னை வருத்தி நடித்த இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது. இந்த படம் உலகெங்கும் ரூபாய் 160 கோடி வசூலை குவித்தது. இந்த நிலையில், ஆடுஜீவிதம் படம் வரும் 19ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.