Actress Rachitha : கிராபிக்ஸ் செய்யவில்லை; சோஷியல் மீடியாவில் வெளியிடுவேன் - நடிகை ரச்சிதாவை எச்சரித்த தயாரிப்பாளர் சதீஷ்

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷை விமர்சித்து நடிகை ரச்சிதா பதிவிட்ட நிலையில் ரச்சிதாவை மிரட்டும் வகையில் தயாரிப்பாளர் சதீஷ் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continues below advertisement

சர்ச்சையில் சிக்கிய தயாரிப்பாளர் சதீஷ்

தமிழில் டப்பிங் செய்து வெளியாகும் ஹாலிவுட் படங்களை வெளியிட்டு வந்தவர் ஜே.எஸ்.கே சதீஷ். 2012 ஆம் ஆண்டு வெளியான ஆரோகனம் படத்தை தயாரித்திருந்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் , பரதேசி , மதயானைக் கூட்டம் , ரம்மி , உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போது ஜே.எஸ் கே சதீஷ் ஃபயர் என்கிற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பாலாஜி முருகதாஸ் , சாக்‌ஷி அகர்வால் , விஜய் தொலைக்காட்சி புகம் ரச்சிதா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பாலாஜியின் எக்ஸ் தள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Continues below advertisement

தயாரிப்பாளரை தகாத வார்த்தையில் திட்டிய பாலாஜி

தனது பதிவில் பாலாஜி “ ஃபயர் என்கிற படத்தில் நான் நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு ரூபாய்கூட சம்பளமாக தரவில்லை. “ என்று பாலாஜி தகாத வார்த்தையை அவரை திட்ட்டியிருந்தார். 

பாலாஜியைத் தொடந்து ரச்சிதா

பாலாஜியைத் தொடர்ந்து  நடிகை ரச்சிதா ஜே.எஸ்.கே சதீஷை கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலாஜியின் பதிவை குறிப்பிட்ட ரச்சிதா “ இது எனக்கு முன்னாடியே தெரிந்துதான் நான் விலகிவிட்டேன். உங்களுக்கு தாமதமாக தெரிந்துள்ளது. பரவாயில்லை இந்த நபரைப் பற்றிய  உண்மை ஒரு நாள் தெரிந்துதான் ஆக வேண்டும் . இந்த பிரச்சனையில் நான் தனியாக இல்லை. ஜே.எஸ்.கே சதீஷ் நீங்கள் ஒரு இயக்குநர் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் என்னை அவ்வளவு அவமானப் படுத்தி இருக்கிறீர்கள். தன் விணை தன்னைச் சுடும் ” என்று அவர் பதிவிட்டுள்ளார்

மிரட்டும் தொனியில் பேசிய தயாரிப்பாளர்

ரச்சிதாவின் பதிவைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சதீஷ் ரச்சிதாவை மிரட்டும் வகையில் பதிவிடுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது  “ நீங்கள் என் படத்தில் பணம் வாங்கிதான் நடித்தீர்கள் . அதற்கான அக்ரீமெண்ட் என்னிடம் இருக்கிறது. நீங்கள் பணம் வாங்கி உங்கள் சம்மதத்துடன் நடித்ததால் தான் உங்கள் பிறந்த நாளுக்கு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறேன். நீங்கள் நடிக்காததை கிராஃபிக்ஸ் செய்து போடவில்லை. இன்னும் படம் வெளியாகவில்லை. அப்போது நீங்கள் நடித்த எல்லா காட்சிகளும் வெளியே வரும் . நீங்கள் பணம் வாங்கி இருப்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தேவையில்லாமல் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவில் போட வேண்டிய தேவை வரும். மதுரை வினையும் , பிக்பாஸ் வினையும் தன்னைச் சுடும்..குருவே சரணம்” என்று ஜே.எஸ்.கே சதீஷ் பதிவிட்டுள்ளார். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola