world women's boxing: மகளிர் உலக குத்து சண்டை போட்டியில் 75 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில், ஆஸ்திரேலியா வீராங்கனை கேட்லின் பார்க்கரை வீழ்த்தி லவ்லினா தங்கம் பதக்கம் வென்றார்.


4 தங்கங்கள்:


இதற்கு முன்பு, 48 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டியில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.


அதன் பின்னர், 81 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீட்டி போரா இந்தியாவுக்காக இரண்டாவது தங்கம் வென்றார்.  


இதையடுத்து, இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தினை 50 கிலோ எடைப் பிரிவில் நிகாத் ஜரின் வென்றார்..


இந்நிலையில், மேலும் ஒரு தங்கத்தை 75 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில் லவ்லினா போர்கெயின் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.


மகளிர் உலக கோப்பை:


மகளிருக்கான உலக குத்துச்சண்டை போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டியில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார். 






அதையடுத்து, 81 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீட்டி போரா சீனா வீராங்கனை லினா வாங்கை வீழ்த்தி இந்தியாவுக்காக இரண்டாவது தங்க பதக்கம் வென்றார். 






இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில், இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தினை 50 கிலோ எடைப் பிரிவில் நிகாத் ஜரின் வென்றார்..






அதனை தொடர்ந்து, மேலும் ஒரு தங்கத்தை 75 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில் லவ்லினா போர்கெயின் வென்று, நான்காவது தங்க பதக்கத்தை பதிவு செய்தார்.


இந்நிலையில், 4 பதக்கங்கள் வென்றுள்ளது, இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: T20I Hundred: தென்னாப்ரிக்க அணியை பொளந்து கட்டிய ஜான்சன் சார்லஸ்.. டி20 வரலாற்றில் புதிய சாதனை


Also Read: DC-W vs MI-W Final LIVE: பவுலிங்கில் அசத்தும் டெல்லி; பவர்ப்ளே முடிவில் மும்பை 27 - 2..!