பங்குனி உத்தர திருவிழாவையொட்டி கேரளாவில் உள்ள  பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயில்:

 தேவஸ்தானம் சார்பில் ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி பங்குனி உத்திர விழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாலை 5 மணி அளவில் திறக்கப்பட்டது.  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோன்று,  ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறக்கப்பட்டது.  இதையடுத்து, நாளை கொடியேற்றதுடன் தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. பத்து நாள் நடைபெற உள்ள விழாவுக்கான கொடியை நாளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து தொடங்கி வைக்கிறார்.

பங்குனி உத்திரம் சிறப்பு ஏன்?

பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பம்பா நதிக்கரையில் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவில் பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்துகொண்டு சபரிமலை ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம். ஐயப்பனை பெண்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆராட்டு திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

வரிசை எண்பூஜைபிரசாதம்விலை பட்டியல்
1

நெய்அபிஷேகம்: 1 தேங்காய்

ரூ. 10
2அஷ்டாபிஷேகம்ரூ. 6,000
3கணபதி ஹோமம்ரூ. 375
4உஷ பூஜைரூ. 1,500
5நித்ய பூஜைரூ. 4,000
6பகவதி சேவைரூ. 2,500
7களபாபிஷேகம்ரூ. 38,400
8படி பூஜைரூ. 1,37,900
9துலாபாரம்ரூ. 625
10புஷ்பாபிஷேகம்ரூ. 12,500
11அப்பம் (1 பாக்கெட்)ரூ. 45
12அரவணை (1 டின்)ரூ. 100
13விபூதி பிரசாதம்ரூ. 30
14வெள்ளை நைவேத்தியம்ரூ. 25
15சர்க்கரை பாயசம்ரூ. 25
16பஞ்சாமிர்தம்ரூ. 125
17அபிஷேக நெய் (100 மிலி)ரூ. 100
18நவக்கிரக பூஜைரூ. 450
19ஒற்றைகிரக பூஜைரூ. 100
20மாலை/வடி பூஜைரூ. 25
21நெல்பறைரூ. 200
22மஞ்சள் பறைரூ. 400
23தங்க அங்கி சார்த்தி பூஜைரூ. 15,000
24நீராஞ்சனம்ரூ. 125
25

இருமுடிக் கட்டு நிறைத்தல் (பம்பை)

ரூ. 300

சிறப்பு பூஜைகள்: 

பங்குனி உத்தர திருவிழாவையொட்டி, தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.  

இதனிடையே, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.