DC-W vs MI-W Final LIVE: டெல்லியை வீழ்த்தி கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்..!
DC-W vs MI-W Final WPL 2023 LIVE:
சிறப்பாக விளையாடி வந்த ஷிவர் ப்ரண்ட் 52 பந்தில் 53 ரன்கள் சேர்த்துள்ளார்.
18 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது.
வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் மும்பை அணி 17வது ஓவரில் 100 ரன்கள் எடுத்துள்ளனர்.
சிறப்பாக விளையாடி வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 37 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆகியுள்ளார்.
15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் சேர்த்துள்ளது.
13 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் சேர்த்துள்ளனர்.
10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளனர்.
பவர்ப்ளே முடிவிலி மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்த்துள்ளது.
விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து தடுமாறி வந்த டெல்லி அணி 19வது ஓவரின் முதல் பந்தில் 100 ரன்களை எடுத்துள்ளார்.
18 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது.
15.4வது ஓவரில் டெல்லி அணி தனது 8வது விக்கெட்டை இழந்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்துள்ளது.
14வது ஓவரின் 2வது பந்தில் ஜோனசன் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார்.
13 ஓவரின் கடைசிப் பந்தில் அருந்ததி தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார். டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த மெக் லேனிங் 12 ஓவரின் 4வது பந்தில் ரன் அவுட் ஆனார்.
11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்திய மரிசான் கேப் 21 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்துள்ளது.
7.2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது.
6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டெல்லி அணியின் ஜெமிமா 9 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இந்த விக்கெட்டையும் இஸி வாங் தான் கைப்பற்றினார்.
4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் குவித்துள்ளது.
மூன்று ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் குவித்துள்ளது.
இரண்டு ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்கள் குவித்துள்ளது.
இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் கேப்ஸி ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தினை எதிர்கொண்ட ஷேஃபலி வர்மா முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசிய நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
மகளிர் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
MI vs DC Playing XI: மகளிர் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
இந்த தொடக்க சீசனில் எந்த அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் என்று ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன. லீக் சுற்றுகளில் அடிப்படையில் மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக அடியெடுத்து வைத்தது. அதேநேரத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், எலிமினேட்டர் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக நுழைந்தது.
யாருக்கு வெற்றி வாய்ப்பு..?
இதுவரை இந்த இரு அணிகளும் இந்த தொடரில் இரண்டு முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி, தோல்வியை கண்டுள்ளது. இருவருக்குமே சாம்பியனாக முடிசூடுவதற்கான சம வாய்ப்புகள் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அணியின் செயல்பாடுகளை பொறுத்தே தெரியும்.
சிறந்த பேட்ஸ்மேன் ..?
சமீபத்திய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் அபாரமாக விளையாடி வருகிறார். இவர் கடந்த உபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 72 ரன்கள் குவித்தார். அதேபோல், டெல்லி அணி கேப்டன் மெக் லானிங் இந்த தொடரில் 310 ரன்கள் குவித்து ஆரஞ்சு கோப்பையை தன்வசம் வைத்துள்ளார்.
சிறந்த பந்துவீச்சாளர்..?
இந்திய சுழற்பந்துவீச்சாளர் சைகா இஷாக் தற்போது அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன்பாக சோஃபி எக்லெஸ்டோன் 16 விக்கெட்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
எந்த அணியில் மாற்றம் ஏற்படும்?
உபி வாரியர்ஸு அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது சிறந்த அணியை களமிறக்கியது. இன்றைய போட்டிக்கு முன்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படாத பட்சத்தில் லெவன் அணியில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை.
டெல்லி அணியும் தங்களது பலமான அணியை இன்று களமிறக்கும். மிகப்பெரிய அளவில் இன்று மாற்றம் இருக்காது.
கணிக்கப்பட்ட டெல்லி அணி:
மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா , ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ்
கணிக்கப்பட்ட மும்பை அணி:
ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நடாலி ஸ்கீவர், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், சாய்கா இஷாக், ஹுமைரா காஜி மற்றும் ஜிந்திமணி கலிதா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -