இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 133 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரிதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ரானா, சேத்தன், தேவ்தட் படிக்கல் ஆகியோர் அறிமுக வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இந்திய அணி, 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) 45 ரன்கள் எடுத்தது. 7 ஆவது ஓவரில் 49 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. கெய்க்வாட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 40 ரன்களில் வெளியேறினார். அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கி விளையாடினார். பின்னர், 99 ரன்களில் 3 ஆவது விக்கெட்டை இழந்த இந்திய அணி, 16 ஓவர்களின் முடிவில் 100 ரன்கள் எடுத்தது. அடுத்து சஞ்சு சாம்சன் வெளியேறியபோது, இந்தியா 104/4 என்று இருந்தது. இலங்கை அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. அதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் கெய்க்வாட்-21, தவான்-40, படிக்கல்-29, சாம்சன்-7, ரானா-9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். புவனேஸ்குமார்-13, சைனி- 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி தரப்பில் தனஞ்ஜெயா-2, சமீரா-1, ஹசரங்கா-1 ஷனாகா-1 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இலங்கை அணி விளையாடி வருகிறது முதல் ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்த் விளையாடி வருகின்றனர்.