விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கடந்த மாதம் விளையாடியது.  இந்த போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடனான தொடரில் விளையாட வேண்டி இருந்ததால் இந்திய அணி அந்த நாட்டிலே தங்கியுள்ளனர். அதே சமயத்தில் இலங்கை அணியினருடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் அறிவிக்கப்பட்டது.


இந்த தொடருக்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மேலும், பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் இலங்கை புறப்பட்டு சென்றனர்.




இந்த நிலையில், இலங்கை அணியினருடனான முதல் ஒருநாள் போட்டி இன்று அந்த நாட்டின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் மதியம் 2.30 மணியளவில் போடப்பட உள்ளது.


ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ப்ரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்ப கவுதம், குருணல் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சஹாரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


தசுன் சனகா தலைமையிலான இலங்கை அணியில் தனஞ்செய டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, பதும் நிஷங்கா, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, அசேன் பந்தாரா, மினோத் பானுகா, லகிரு உதாரா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்‌ஷன் சந்தகன், அகிலா தனஞ்செயா, சிரன் பெர்னாண்டோ, தனஞ்செயா லக்‌ஷன், இஷான் ஜெயவர்தனே, பிரவீன் ஜெயவிக்ரமே, அசிதா பெர்னாண்டோ, கசுன் ரஜிதா, லகிரு குமாரா, இசுரு உதானா இடம்பெற்றுள்ளனர்.




ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியின் துணை கேப்டனாக பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரத்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஆகியோரில் ஷிகர் தவானுடன் ஆட்டத்தை தொடங்கப்போவது யார் என்பது எதிர்பார்ப்பாகவே உள்ளது. ஐ.பி.எல். தொடரில் தங்களது திறமையை வெளிக்காட்டியது முதல் இந்த போட்டியில் வாய்ப்புகளைப் பெற்ற இளம் வீரர்களுக்கு இந்த தொடர் தங்களது திறமையை வெளிக்காட்ட மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.


மதியம் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி சிக்ஸ், சோனி டென் 3 ஆகிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.


Tokyo Olympics 2020: ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழைந்த கொரோனா.. 2 வீரர்களுக்கு பாசிட்டிவ்..!